விஜய் மாதிரி யாராவது இருக்க முடியுமா? பொறாமைப் பட்டு என்ன ஆகப் போகுது – பொங்கிய பிரபல தயாரிப்பாளர்

பல கோடிகள் சம்பளம் வாங்கிட்டு நடிக்கிற நடிகர்கள் விஜய் மாதிரி இருக்க கத்துக்கோங்க என்று பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சினிமாவில் அறிமுகமாகி 30 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது.

அவர் மீது வாரிசு நடிகர் என்ற பிம்பம் இருந்தாலும் அவரது முதல் படத்திலிருந்து இன்றிருக்கும் உச்ச இடத்திற்கு வர அவர் பல்வேறு சோதனைகளைக் கடந்துதான் சாதனைகளாக மாற்ற முடிந்திருக்கிறது. ஆரம்ப கட்டத்தில் இருந்து வந்த இடத்தை அவர் என்றுமே மறக்கவில்லை என்று அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இத்தனை ஆண்டுகள் சினிமாவில் விஜய் இருந்து வந்தாலும் அவர் மீது இதுவரை எந்த தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும் குறை கூறியதில்லை. அவர் எந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்கும் லேட் ஆகப் போனதாகவோ, தயாரிப்பாளர்களுக்கு ஒதுக்கிய கால்ஷீட்டில் குறித்த தேதிக்கு போகாமல் இருந்ததாகவோ இதுவரை யாரும் கூறக் கேள்விப்பட்டதில்லை.

அவரது அப்பாவின் இயக்கத்தில் நடித்து வந்தபோது, தனக்கு தனி ரூம் வேண்டும் எனக் கேட்டதற்கு எஸ்.ஏ.சி அவரைக் கன்னத்தில் அடித்ததாகப் பிரபலம் ஒருவர் கூறியிருக்கிறார். அப்படி ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு இப்போது இந்த இடத்திற்கு வந்த பின்னும் அவர் மீது யாரும் குறைகூறுவதில்லை. அதற்கு அவர் தயாரிப்பாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம், அவர் நடிக்கும் படங்களுக்கு மக்களின் உள்ள கிரேஸ் மற்றும் வசூல்தான் காரணம்.

இந்த நிலையில், விஜய் மாதிரி மற்ற நடிகர்கள் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளார் தனஞ்செயன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ‘ஒரு படத்தில் நடிகருக்கு சம்பளம் கொடுத்து, அவர் ஷூட்டிங்கு வர ஏற்பாடு செய்து கொடுப்பது இதுதான் எனது பொறுப்பு. இதை மீறி ஒரு தேதி கொடுத்தால் வராமல் இருப்பது. டப்பிங்கின்போது வருவதில்லை. ஷூட்டிங் கேன்சல் செய்வது. தொடர்ந்து ஷூட்டிங் கேன்சல் செய்வது. கேட்டால் உடல் நிலை சரியில்லை என்பது, இது மாதிரி காரணங்களை சொல்லி ஒரு புரடியூசரை பாதிக்கின்ற விஷயங்கள்.

மேலும், ஷூட்டிங் வந்தாலும் அங்கு உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது. அதாவது, பர்சனலாக பேசுவதுடன், அடுத்த படத்தின் கதையைக் கேட்டுக் கொண்டிருப்பார். அந்தக் கதையைக் கேட்பது இப்போது படமெடுக்கும் புரடியூசரின் நேரம். மொத்தமுள்ள நேரத்தில் 1 மணி நேரத்தில் நடிக்கவில்லை என்றாலும் இது நட்டம்தான்.

இதை நடிகர்கள் மனதில் வைக்க வேண்டும். இப்படத்தில் நடிக்கும்போது புரமோசன் வருவதில்லை, ஆனால் சொந்தப் படமெடுத்தால் வருகிறார்கள் இதெப்படி? உங்கள் வேலையை நீங்கள் செய்ய வேண்டும். லலித் சார் ஒரு இண்டர்வியூவில்,’ 300 கோடியில் எடுக்கப்படும் படத்திற்கு ரூ.1 கோடி என்பது ஒண்ணுமேயில்லை.

ஆனால், Leo படத்தின்போது, ஒரு பாடல் காட்சிக்கு 7 நாட்கள் ஆகும் என்ற நிலையில், விஜய் சார் டான்ஸ் மாஸ்டரை தினேஷை அழைத்து, ஒரு நாளை குறைத்தால் புரடியூசருக்கு 1 கோடி ரூபாய் குறையும் பிரதர். நான் எக்ஸ்ட்ராவாக கால்ஷுட் கொடுக்கிறேன்.

மாலை 6 மணிக்கு முடியும் ஷுட்டிங்கை நேரமானாலும் பரவாயில்லை முடித்துக் கொடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதேபோல், காலையில் 7 மணிக்கு ஷூட்டிங் என்றால் 6:30 மணிக்கு விஜய் வந்துவிடுவார் என்பதால் மொத்த டீமுமே அங்கே சரியாக இருக்கும். இத்தனை கோடி பட்ஜெட் படம் குறுகிய காலத்தில் முடிக்க விஜய் தான் காரணம்.

இதுமாதிரி அனைத்து நடிகர்களும் இருக்க வேண்டும். விஜய் சார் மீது நிறையப் பேருக்கு பொறாமை இருக்கும். அதையெல்லாம் தாண்டி அவர் உச்சத்திற்கு போகக் காரணம் அந்த ஒழுக்கம் தான். பொறாமைப் பட்டு ஒண்ணும் ஆகப்போறதில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *