விடுதலைச் சிறுத்தை கட்சியின் மகளிரணி சார்பில், அக்டோபர் 2-ம் தேதி கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.
இந்த மது ஒழிப்பு மாநாட்டில், அ.தி.மு.க மற்றும் விஜய்யின் த.வெ.க கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த திருமாவளவன், மாநிலத்தில் ஆட்சியில் அதிகாரம் என்ற கோரிக்கையை எழுப்பி தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த சூழலில், விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் மது, மற்றும் போதைப்பொருள், ஒழிப்பும் மகளிர் மாநாடு நடைபெற உள்ள நிலையில், மாநாட்டு முகப்பு,மாநாட்டுத் திடல் அலங்கரிக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. | புகைப்படங்கள்: பாபு ராஜந்திரன் – கள்ளக்குறிச்சி
விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் நடத்தப்படும் மது, மற்றும் போதைப்பொருள், ஒழிப்பும் மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அக்டோபர் 2 அன்று நடைபெற உள்ளது. | புகைப்படங்கள்: பாபு ராஜந்திரன் – கள்ளக்குறிச்சி
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தை கட்சியின் மது, மற்றும் போதைப்பொருள், ஒழிப்பும் மகளிர் மாநாட்டுத் திடல் அலங்கரிக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. | புகைப்படங்கள்: பாபு ராஜந்திரன் – கள்ளக்குறிச்சி