விஜய்க்கு வில்லனாக சம்பவத்தை செஞ்சு விட்ட யுவன்.. இதுக்கு அந்த படமே பரவால்ல போல, தலைமறைவான வெங்கட் பிரபு

Vijay In Goat 3rd Song: விஜய் கிட்டத்தட்ட 67 படங்களில் நடித்து முடித்த நிலையில் ஒரு சில படங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு ஃபெய்லியர் படமாக மக்களிடமிருந்து மொக்கையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. ஆனால் இது எல்லாம் கடந்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை கொடுத்து தற்போது ஆட்டநாயகனாகவும் வசூல் மன்னனாகவும் ஜெயித்து காட்டியிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட், வாரிசு போன்ற படங்கள் கலையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நஷ்டம் ஏற்படாத அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சினிமாவில் கடைசியாக இரண்டு படத்தை நடித்து முடித்துவிட்டு பிரேக் எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி இருந்தார்.

கோட் படத்தை வெறுக்கும் அளவிற்கு சொதப்பிய யுவன்

அதனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த கோட் படத்திற்கு பிறகு தளபதியின் 69 படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் கோட் படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் ரிலீசாக இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் கோட் படத்திலிருந்து ஏற்கனவே வெளிவந்த இரண்டு பாடல்களைத் தொடர்ந்து நேற்று வெளியான ஸ்பார்க் என்ற பாடலை யுவன் பாடி இருக்கிறார். பொதுவாக யுவன் பாடிய பாடல்கள் என்றால் மனதிற்கு இதமாகவும், கேட்பதற்கே ஒரு ஜாலியாக இருக்கும்.

ஆனால் ஸ்பார்க் பாடலில் யுவன் ஒரு பக்கம் ஏமாற்றத்தை கொடுத்திருந்தாலும், கொஞ்சம் கூட பார்க்க சகிக்க முடியாத அளவிற்கு டீ ஏஜிங் என்ற பெயரில் விஜய்யை அசிங்கப்படுத்தி விட்டார்கள். இது என்னடா விஜய்க்கு வந்த சோதனையை என்று சொல்வதற்கு ஏற்ப மூன்றாவது சிங்கிள் பாடல் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பெரிய ஏமாற்றத்தை யுவன் கொடுத்து விஜய்க்கு வில்லனாக சம்பவத்தை செய்து விட்டார்.

அதாவது கோட் படத்தில் அப்பா மகன் என இரண்டு கேரக்டரில் விஜய் நடிக்கிறார். அதனால் மகன் கேரக்டருக்கு ஏற்ற மாதிரி விஜய்யை இளமையாக காட்ட வேண்டும் என்பதற்காக அதிநுட்ப டெக்னாலஜியான டீ ஏஜிங் செய்து விஜய்யை வைத்து சொதப்பி விட்டார் வெங்கட் பிரபு.

அந்த வகையில் இதில் வெளிவந்த மூன்று பாடல்கள்மே ஓரளவுக்கு தான் இருக்கு என்று சொல்லும் பொழுது படத்தின் கதை எந்த அளவுக்கு இருக்கும் என்று யூகிக்க முடியாத அளவிற்கு ரசிகர்கள் தலையில் கை வைத்துக் கொண்டு புலம்பித் தவிக்கிறார்கள். இப்படித்தான் விஜய்யின் ஐம்பதாவது படத்திற்கு ஏகபோக வரவேற்பை வைத்து காத்திருந்த பொழுது சுறா படம் காலை வாரிவிட்டது.

அதே மாதிரி சினிமாவை விட்டு விலகும் இந்த நேரத்தில் கோட்படமும் இப்படி அமைந்து விட்டது என்று ஒரு பக்கம் விஜயின் ரசிகர்கள் புலம்புகிறார்கள். இதோட சரி வெங்கட் பிரபு சினிமாவில் முகத்தையே காட்டக்கூடாது என்று தலைமறைவாகி விட்டார். அஜித்துக்கு மங்காத்தா படத்தையும், சிம்புவுக்கு மாநாடு படத்தையும் கொடுத்த வெங்கட் பிரபுவுக்கு விஜய்க்கு ஒரு வெற்றியை கொடுக்க முடியாமல் ஏமாற்றி விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *