பிக் பாஸில் இருந்து விலகுகிறேன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட கமல்.. அடுத்த 5 ஹீரோகளுக்கு வலை வீசிய விஜய் டிவி

Kamal and Bigg Boss 8: மக்களை என்டர்டைன்மென்ட் பண்ணுவதில் எத்தனையோ சேனல்கள் இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ஈடு இணையே கிடையாது. அதில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் மிகப் பெரிய வெற்றியை பார்த்து வருகிறது. அந்த வகையில் குக் வித் கோமாளி மன அழுத்தத்தை குறைக்கும் நிகழ்ச்சியாக காமெடி கலாட்டா என வேறு ஒரு ஜோனரில் மக்களை மகிழ்வித்து வருகிறது.

இன்னொரு பக்கம் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் 18 மற்றும் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டு அவர்களுடைய உண்மையான கேரக்டரும் அதில் போட்டி பொறாமை சண்டை சச்சரவுகள் என அனைத்தையும் வைத்து குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படியாக ஒரு நிகழ்ச்சியாக வெற்றி பெற்று இருக்கிறது. அந்த வகையில் இதுவரை 7 சீசன்கள் முடிந்து இருக்கிறது.

இந்த அளவிற்கு வெற்றி அடைந்ததற்கு முக்கிய காரணம் கமல் தொகுத்து வழங்கியது தான். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் துவங்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருவார்கள். அந்த வகையில் இந்த வருடம் பிக் பாஸ் சீசன் 8 எப்பொழுது ஆரம்பமாகும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதன்படி தற்போது கமல் வெளியிட்ட அறிக்கை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. அந்த அறிக்கையில் இந்த ஒரு விஷயத்தை சொல்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் வேறு வழி இல்லை பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க மாட்டேன். எனக்கு சினிமாவில் நிறைய கமிட்மெண்ட் இருப்பதால் பிக் பாஸ் தொடரிலிருந்து கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நிறைய கற்று இருக்கிறேன். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்தவர்களுக்கு மிகவும் நன்றி என கூறி பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக கூறியிருக்கிறார். தற்போது இவர் எடுத்த முடிவின்படி விஜய் டிவி சேனல் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை செய்து வருகிறார்கள்.

கமல் எடுத்த முடிவு பலருக்கும் உண்டான அதிர்ச்சி

kamal bigg boss

அந்த வகையில் ஏற்கனவே கமல் உடல்நிலை சரியில்லாத போது பாதி நேரமாக தொகுத்து வழங்கிய சிம்புவுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே மாதிரி சரியான முறையில் வழியும் நடத்தினார் என்பதினால் முதல் ஆப்ஷனாக சிம்புவிடம் பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது.

இவரை தொடர்ந்து விஜய் சேதுபதி, அர்ஜுன், சூர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன் இவர்களிடமும் விஜய் டிவி சேனல் பேசிக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இவர்களில் ஒருவர் தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கமல் வந்து பேசுவதை பார்ப்பதற்கு மக்கள் ரொம்பவே ஆர்வமாக இருப்பார்கள்.

அந்த வகையில் கமல் கொடுக்கும் புத்தகப் பரிந்துரைகள், வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்கள், தன்னம்பிக்கை ஊட்டும் சிந்தனைகள், தமிழ் பற்று மற்றும் தேசப்பற்று போன்ற வார்த்தைகள் அனைத்தையும் வைத்து ஒரு தொலைநோக்கு பார்வையுடன் சரிவர செய்து வந்தார். இதனால் எந்த பிரபலங்கள் வந்தாலும் கமலை போல் தொகுத்து வழங்குவதில் சிறந்தவராக யாரும் இருக்க முடியாது என்று சில ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் கடந்த சீசனில் பிரதீப்புக்கு செய்த துரோகத்துக்கு கமல் எடுத்த முடிவு சரியான முடிவு தான். சரியான தீர்ப்பை வழங்க முடியாத கமல் அவருடைய மரியாதையே எண்ணி அவரே விலகிப் போனது நல்லது என்று கையெடுத்து கும்பிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *