மீண்டும் கருடன் கூட்டணியில் சூரி நடிக்கும் அடுத்த படம்.. சம்பவம் செய்ய போகும் இயக்குனர் யார் தெரியுமா.?

Soori: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு அடையாளமாக மாறிய சூரி, எதார்த்தமான நடிப்பில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். நடிப்பு மட்டுமில்லாமல் கதை தேர்வு செய்யும் முறையிலும் சூரிக்கு ஈடாக யாரும் இல்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு தேர்ந்தெடுத்த கதைகள் அனைத்தும் வெற்றி பெற்று தற்போது கதாநாயகனாக முளைத்திருக்கிறார்.

வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்து, போன வருடம் வெளிவந்த விடுதலை படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதோடு விடாமல் அடுத்த கட்ட முயற்சியாக ஹீரோவாக பயணிக்க ஆரம்பித்தார். அப்படி அவருக்கு கை கொடுத்த படம் தான் சமீபத்தில் வெளிவந்த கருடன். இதில் சொக்கனாக பலரையும் சொக்க வைத்து இது அல்லவா நடிப்பு, இப்படி ஒரு நடிப்பை நாங்கள் சூரியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

எதார்த்தமான நடிப்பை தொடர்ந்து கொடுத்து வரும் சூரி

சூரி வந்தாலே புல்லரித்து விடுகிறது என்று சொல்லும் அளவிற்கு தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத் ராஜ் இயக்கத்தில் நடித்துள்ள கொட்டுக்காளி வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளிவந்த நிலையில் இதுவரை இப்படி ஒரு ட்ரெய்லரை பார்த்ததே இல்லை.

எந்த ஒரு இசையும் இல்லாமல் வெறும் கொக்கரிக்கும் சேவலை வைத்து கதையை வினோதமான முறையில் கொண்டு வந்திருக்கிறார். அதாவது முதல் காட்சியில் சேவலை சுதந்திரமாக திரிய விடாமல் கட்டி போட்டு இருக்கிறார். இதுதான் அனைத்து பெண்களின் நிலைமை என்றும் ஒரே காட்சியில் பெண்ணையும் சேவலையும் வைத்து வினோத் ராஜ் ஒரு அருமையான காட்சி மூலம் படத்தை கொண்டு வந்திருக்கிறார்.

அதனால் தான் இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளை பெற்றிருக்கிறது. அந்த வகையில் ஹீரோவாக சூரிக்கு இது மூன்றாவது படமாக ஒரு சம்பவத்தை ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறது. இதனைத் தொடர்ந்து விடுதலையின் இரண்டாம் பாகமும் வெளிவர தயாராக இருக்கிறது. ஆனால் இதற்குள் சூரி ஹீரோவாக நடிக்கப் போகும் ஐந்தாவது படத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டு விட்டார்.

அந்த வகையில் சூரி அடுத்து நடிக்கப் போகும் இயக்குனர் யார் என்றால் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான விலங்கு தொடரை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ். இவர்கள் கூட்டணியில் உருவாக்கப் போகும் படத்தை தயாரிக்கப் போவது கருடன் படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் என்பவர் தான். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் இனி சூரிக்கு தொடர்ந்து வெற்றி வாகை தான் கிடைக்கப் போகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *