175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த கேப்டனின் 6 படங்கள்.. ஒரு வருஷத்தில் 15 படமா?

Vijayakanth: அது ஒரு பொற்காலம் என்று சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவில் விஜயகாந்தின் படைப்புகள் மறக்க முடியாத அளவிற்கு சிறந்த படங்களாக வெற்றி பெற்று இருக்கிறது. அந்த வகையில் இப்பொழுது கூட இவருடைய படங்களை பார்த்து ரசிக்கும் படியாக இருக்கிறது. இவர் நடித்த பல படங்கள் ஹிட் ஆகி இருக்கிறது. அதிலும் ரஜினி, கமலுக்கு போட்டியாக தொடர்ந்து பல படங்களை கொடுத்திருக்கிறார்.

இன்னும் சொல்ல போனால் இவர்களுக்கு இருக்கும் ரசிகர்களை விட கேப்டன் விஜயகாந்துக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் வாழ்ந்து காட்டியிருக்கிறார். கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். 80, 90களில் ஹீரோவாக நடித்த பொழுது ஒரு வருஷத்தில் 15 படங்களுக்கும் மேல் நடித்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

ஒரு வருஷத்துல 15 படங்களுக்கு மேல் நடித்த கேப்டன்

அதாவது 1984 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் 10 படங்கள் ரிலீஸ் ஆயிருக்கிறது. அதே மாதிரி 1985 ஆம் ஆண்டு 15 படங்களில் நடித்து புது இயக்குனர்களுக்கும், இளம் நடிகர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் வகையில் அவர்களை தூக்கி நிறுத்திருக்கிறார். அந்த வகையில் கேப்டன் உதவி செய்த வகையில் தற்போது விஜய் மற்றும் சூர்யா முன்னணி ஹீரோவாக இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

மேலும் விஜயகாந்த் நடிப்பில் வந்த எத்தனையோ படங்களில் மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார். அதில் சில படங்கள் 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த படமாக அமைந்திருக்கிறது. பல கிராமங்களில் இவருடைய படங்கள் தான் பொழுதுபோக்கு என்று சொல்வதற்கு ஏற்ப நிறைய கிராமங்களில் உள்ள தியேட்டர்களில் 175 நாட்களுக்கு மேல் ஓடி இருக்கிறது. அந்த படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

வைதேகி காத்திருந்தாள்: ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு விஜயகாந்த், ரேவதி, கவுண்டமணி, செந்தில் நடிப்பில் வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது உண்மையான காதலுக்கு அழகு தேவையில்லை என்பதை அவ்வளவு அழகாக சொல்லப்பட்டிருக்கும். அத்துடன் உண்மையான காதலுக்கு உயிரையும் கொடுக்க தயார் என்று இப்படத்தில் வெள்ளைச்சாமியாக விஜயகாந்த் அனைவரது மனதிலும் வாழ்ந்து காட்டியிருப்பார். இதில் வரும் அந்த டயலாக் “போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்” உணர்வுபூர்வமான வார்த்தையாக இருக்கும்.

சேதுபதி ஐபிஎஸ்: பி வாசு இயக்கத்தில், 1994 ஆம் ஆண்டு விஜயகாந்த், மீனா, நம்பியார், ஸ்ரீவித்ரா நடிப்பில் சேதுபதி ஐபிஎஸ் திரைப்படம் வெளிவந்தது. தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதையை சொல்லும் அளவிற்கு விஜயகாந்த் மிரட்டல் ஆன நடிப்பை கொடுத்திருக்கிறார். இப்படம் விஜயகாந்தின் வெற்றி படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

அம்மன் கோவில் கிழக்காலே: ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு விஜயகாந்த், ராதா நடிப்பில் அம்மன் கோவில் கிழக்காலே திரைப்படம் வெளிவந்தது. இப்படத்திற்காக விஜயகாந்த் நடிகருக்கான விருது கிடைத்தது. கேப்டனின் முதல் வெள்ளி விழா படமாகவும் வெற்றி பெற்றது. கிளைமேக்ஸ் காட்சியை பார்க்கும் பொழுது அனைவரது கண்ணிலும் கண்ணீர் வர வைக்கும் அளவிற்கு விஜயகாந்தின் நடிப்பு பாராட்டை பெற்றுவிட்டது.

செந்தூரப்பூவே: பி.ஆர்.தேவராஜ் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு விஜயகாந்த், ராம்கி, நிரோஷா நடிப்பில் செந்தூரப்பூவே திரைப்படம் வெளிவந்தது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு பிரம்மாண்ட பட வரிசையில் முக்கிய படைப்புதான் இப்படம். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வெற்றி பெற்று படமும் ஹிட் ஆகிவிட்டது.

கேப்டன் பிரபாகரன்: ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு விஜயகாந்த், சரத்குமார், ரூபினி நடிப்பில் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் இவருடைய நூறாவது திரைப்படமாக சாதனை படைத்தது. இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரையிலும் வேறு எந்த ஒரு தமிழ் நடிகருக்கும் இந்த பெருமை கிடைத்ததே இல்லை. அத்துடன் சண்டை காட்சிகளில் எந்தவித டூப்பும் இல்லாமல் அவரே ரிஸ்க் எடுத்து நடித்ததாக பல மேடைகளில் இயக்குனர் செல்வமணி கூறியிருக்கிறார்.

சட்டம் ஒரு இருட்டறை: எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு விஜயகாந்த், பூர்ணிமா நடிப்பில் சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் வெளிவந்தது. இப்படம் கேப்டனுக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. வசூல் ரீதியாகவும் வணிகரீதியாகவும் விஜயகாந்துக்கு சினிமாவில் தூங்கி நிறுத்திய படம் இதுதான் என்றே சொல்லலாம். அந்த வகையில் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி கிடைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *