வான்வழி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்.. 100க்கும் மேற்பட்டவர் பரிதாபமாக பலியான சம்பவம்

Israel started the aerial attack: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே நடைபெற்று வரும் போரால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதட்டமான சூழல் ஏற்பட்டு வருகிறது. அதாவது கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் சுமார் 1000க்கும் மேற்பட்டவர் உயிரிழந்தனர். இதற்கு பழிவாங்கும் விதமாக ஹமாஸ் அமைப்பினரை குறி வைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வந்ததில் இதுவரை 30ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். 90,000 படுங்காயம் அடைந்து இருக்கிறார்கள்.

இப்படி ஒருத்தரை ஒருத்தர் மாத்தி சண்டை போட்டு வரும் இவர்களை தடுத்து நிறுத்தும் விதமாக சர்வதேச நாடுகள் பல வழிகளில் முயற்சி எடுத்தார்கள். இருப்பினும் இவர்கள் இடையே நடக்கும் போரை தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த சூழ்நிலையில் தான் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனி கொல்லப்பட்டார்.

வான்வழி தாக்கல் நடத்திய இஸ்ரேல்

isreal
isreal

இவர் ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த நிலையில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்தது. மேலும், இந்த தாக்குதலுக்கு நிச்சயம் இஸ்ரேல் வருத்தப்படுவார்கள் என்று ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்குமான போர் தற்போது திசைமாறி ஈரான் – இஸ்ரேல் என இரு நாடுகளுக்கு இடையேயான போராக மாறிவிட்டது. இது மத்திய கிழக்கில் பதட்டத்தை அதிகரிக்க வைத்திருக்கிறது.

அடுத்ததாக கிழக்கு காசாவின் தராஜ் மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில் ஏராளமான மக்களை தங்க வைக்கப்பட்டிருந்தது. உடனே பள்ளியின் மீதான இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்திருக்கிறார்கள். இந்த தாக்குதலில் சுமார் 100க்கும் மேற்பட்டவர் பலியாகி இருக்கிறார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுக்கும் விதமாக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். இப்படி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இவர்களுக்கிடையே மக்கள் மாட்டிக்கொண்டு பலியாகி வருவது மிகப்பெரிய துயர சம்பவத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *