வெங்கட் பிரபு படங்களில் இத கவனிச்சீங்களா.? சென்னை 600028 முதல் கோட் வரை

Venkat Prabhu : பொதுவாகவே ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் ஒரு விதமான ஸ்டைல் இருக்கும். அந்த வகையில் வெங்கட் பிரபுவின் படங்களை எடுத்துக் கொண்டால் சென்னை 600028 படம் தொடங்கி அனைத்து படங்களிலும் ஒரு வித்தியாசத்தை காட்டியிருப்பார்.

ஒரே கதையை எடுக்காமல் வெவ்வேறு ஜானரில் படங்கள் எடுத்திருப்பார். அந்த வகையில் சென்னை 600028 படம் நகைச்சுவை கலந்த கிரிக்கெட்டை சொல்லும் விதமாக எடுக்கப்பட்டிருக்கும். இது காதல், சண்டை என அனைத்துமே கலந்து இருக்கும்.

அடுத்ததாக கோவா படம் இளைஞர்களின் கொண்டாட்டம், பார்ட்டி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வெங்கட் பிரபு, கார்த்தி கூட்டணியில் உருவான பிரியாணி படம் திரில்லர் படமாக அமைந்திருந்தது. அதேபோல் சூர்யாவின் மாஸ் படம் காமெடி கலந்த ஹாரர் படமாக வெங்கட் பிரபு எடுத்திருந்தார்.

வெங்கட் பிரபு படங்களில் உள்ள வித்தியாசம்

மேலும் வெங்கட் பிரபுவின் திரை வாழ்க்கையில் பிளாக்பஸ்டர் ஹிட்டான அஜித்தின் மங்காத்தா படம் கேங்ஸ்டர் படமாக அமைந்தது. அசோக் செல்வன் நடிப்பில் வெளியான மன்மத லீலை படம் அடல்ட் படமாக கொடுத்திருந்தார்.

மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் ஹிஸ்டாரிக்கல் சம்பந்தமான கதை தழுவலில் எடுக்கப்பட்டிருந்தது. இப்போது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் தான் விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கோட் படம்.

இந்த படம் ஸ்பை ஆக்சன் கதை களத்தில் இருக்கும் என வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ள நிலையில் அது கண்டிப்பாக நகைச்சுவையாகத் தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கோட் படத்திற்காக காத்திருக்கும் வெங்கட் பிரபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *