மலையாள மீ டூ பற்றி கேட்கப்பட்ட கேள்வி.. சூப்பர் ஸ்டார் சொன்ன பதில், இதெல்லாம் சரின்னு படுதா தலைவரே?

Mollywood me too: உச்ச நடிகர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, அடுத்தடுத்து ராஜினாமா என மலையாள சினிமா உலகம் தம்பித்து போய் இருக்கிறது. எதார்த்த கதைகள் மூலம் உலக சினிமாவை தங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்கள் மலையாள சினிமாக்காரர்கள்.

சமீபத்தில் ரிலீசான பிரேமலு, ஆடு ஜீவிதம் போன்ற படங்கள் எல்லாம் இதற்கு சாட்சி. அப்படிப்பட்ட மலையாள சினிமா உலகத்தை கடந்த வாரத்தில் இருந்து மீ டூ பிரச்சனை தலைகீழாக புரட்டி போட்டு இருக்கிறது.

ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவின் ஒரு சில டாப் ஹீரோக்களின் முகத்திரையை கிழித்திருக்கிறது. அறிக்கை வெளியானதும் மலையாள சினிமா நடிகர் சங்கத்தின் தலைவர் சித்திக் அவரை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் போன்றோர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதைத்தொடர்ந்து இந்திய அளவில் சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படும் மோகன் லால் கூட தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அறிக்கை மீதான விசாரணை நடத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதற்குள் இவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தது எல்லோருக்குமே பேரதிர்ச்சி தான்.

சூப்பர் ஸ்டார் சொன்ன பதில்

இது பற்றி நடிகைய ராதிகா நேத்து கொடுத்த பேட்டி இதுவரை நடந்த சம்பவங்களுக்கெல்லாம் உச்சபட்சமாக மாறிவிட்டது. அதாவது கேரவனுக்குள் கேமராவை மறைத்து வைத்து நடிகைகள் ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்து பார்ப்பதாக ராதிகா குற்றம் சாட்டி இருந்தார்.

இப்படி எந்த பக்கம் திரும்பினாலும் மலையாள சினிமா உலகின் மீ டு பிரச்சனையை பற்றி தான் பேச்சு. இது பற்றி சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த், அப்படியா அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டார்.

நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் இந்த பிரச்சனையை பற்றி தனக்கு தெரியாது என ரஜினி சொல்லி இருப்பது அதிர்ச்சியாக தான் இருக்கிறது. பெண்களுக்கு எதிரான பிரச்சனையைப் பற்றி பெரிய நடிகர்கள் பேசாமல் இப்படி மௌனம் காப்பது சினிமா துறைக்கு நல்லதல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *