Dhanush: தனுஷ் இயக்கி நடித்த ஐம்பதாவது படமான ராயன் சமீபத்தில் அனைத்து தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்று இயக்குனர் அந்தஸ்தும் முழுமையாக கிடைத்துவிட்டது. ஏற்கனவே இயக்கிய பா பாண்டி, ராயன் படத்தை தொடர்ந்து மூன்றாவது படமாக “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.
இப்படத்தை தனுஷ் இயக்கி எழுதி தயாரித்து இருக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி ரிலீஸ் ஆக தயாராக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தனுஷ் நான்காவது படத்தை இயக்குவதற்கு தயாராகி விட்டார்.
கமலுக்கு அடுத்தபடியாக சினிமாவில் பன்முக திறமையை வளர்த்து வரும் தனுஷ்
இதில் தனுஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார். ஆனால் இதில் லீடு கேரக்டரில் பாலாவின் ஹீரோவை நடிக்க வைப்பதற்கு தயாராகி விட்டார். இதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிந்த நிலையில் அந்த ஹீரோவும் தனுசுடன் கூட்டணி வைப்பதற்கு சம்மதம் கொடுத்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை தற்போது பாலா இயக்கத்தில் நடித்து வரும் வணங்கான் பட ஹீரோ அருண் விஜய் தான்.
செகண்ட் இன்னிங்ஸில் கம்பேக் கொடுக்கும் விதமாக ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துக்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து குற்றம் 23, தடவை தாக்க, தடம் போன்ற சில ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார்.
அடுத்ததாக வணங்கான் படம் மூலம் அருண் விஜய்க்கு பேரும் புகழும் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. ஏனென்றால் பாலா இயக்கத்தில் எந்த ஹீரோ நடிச்சாலும் அந்த ஹீரோக்கு பேரும் புகழுடன் சேர்ந்து விருதும் கிடைப்பது நிச்சயம் தான். இந்த சூழ்நிலையில் அடுத்த படத்திற்கும் தயாராகிவிட்டார் அருண் விஜய்.
அந்த வகையில் தனுஷ் இயக்கி நடிக்கப் போகும் D4 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அருண் விஜய் கமிட் ஆகிவிட்டார். இதற்கான படப்பிடிப்புகள் கூடிய விரைவில் தொடங்கப் போகிறது. தனுசுக்கு ராயன் படம் போல, அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் படம் போல இவர்கள் இருவருக்குமே வெற்றி கிடைப்பது உறுதி ஆகிவிட்டது.
இதற்கிடையில் தனுஷ், குபேரா படத்தில் நாகா அர்ஜுனனுடன் சேர்ந்து நடித்து வருகிறார். ஒரு பக்கம் ஹீரோ, இன்னொரு பக்கம் இயக்குனர், என தொடர் வெற்றியை அடைந்து வரும் தனுஷ், பாடகர் தயாரிப்பாளர் என அனைத்து திறமைகளையும் வளர்த்துக் கொண்டு கமலுக்கு அடுத்தபடியாக சினிமாவில் எல்லா வித்தைகளையும் தெரிந்து கொண்ட பன்முக திறமையாளராக வளர்ந்து வருகிறார்.