Jayam Ravi: எந்த பக்கம் திரும்பினாலும் ஜெயம் ரவியின் விவாகரத்து பிரச்சனை தான் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் படி நேற்று ஜெயம் ரவி கொடுத்த பேட்டி அமைந்துவிட்டது. என்னுடைய விஷயத்தில் யாரையும் இழக்காதீர்கள், கெனிஷா சர்டிபிகேட் சைக்காலஜிஸ்ட், அவருடன் இணைந்து எதிர்காலத்தில் ஹீலிங் சென்டர் அமைக்க நான் திட்டமிட்டு இருக்கிறேன் என்று ஜெயம் ரவி சொல்லி இருக்கிறார்.
ஜெயம் ரவியின் விவாகரத்து பிரச்சனையில் ஆரம்பத்தில் கெனிஷாவின் பெயர் ஒரு சந்தேகமாகத்தான் வந்தது. அடுத்தடுத்து வெளியான நிறைய விஷயங்களின் மூலம் இந்த விஷயம் ஊர்ஜிதம் ஆகிவிட்டதாக பலரும் தற்போது கமெண்ட் செய்து வருகிறார்கள்.
கெனிஷா பிரான்சிஸ் கோவாவில் பப்பில் பாடுபவர். அது மட்டும் இல்லாமல் இவர் ஒரு சைக்காலஜிஸ்ட் என்றும் சொல்லப்படுகிறது. ஜெயம் ரவிக்கு நண்பர்களுடன் அவ்வப்போது கோவாவுக்கு ட்ரிப் போவது வழக்கமாக இருந்திருக்கிறது.
மரண பதிலடி கொடுத்த கெனிஷா
அப்படி ஒரு ட்ரிப்பில் அவர் சந்தித்தவர் தான் கெனிஷா. ஆரம்பத்தில் கெனிஷாவின் குரலுக்கு பரீட்சையமான ஜெயம் ரவிக்கு பின்னர் அவருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இணையவாசிகளுக்கு ஏதாவது ஒரு கன்டென்ட் கிடைத்துவிட்டால் போதும், வச்சு செய்து விடுவார்கள்.
அப்படித்தான் ஒரு ரசிகர் தன்னுடைய வேலையை காட்டி இருக்கிறார். கெனிஷா போட்ட ஒரு பதிவில் ஜெயம் ரவி உங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறாரா என கமெண்ட் செய்திருக்கிறார் அந்த ரசிகர். அதற்கு கெனிஷா நீங்கள் உங்கள் அப்பா அம்மாவுடன் பாதுகாப்பாக இருக்கிறீர்களா.
உங்களின் கெட்ட எண்ணத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்கிறீர்களா. முதலில் நீங்கள் ஒரு பாதுகாப்பான நபரா என பதில் அளித்து இருக்கிறார். ஜெயம் ரவி விஷயத்தில் இதுவரை வாயை திறக்காத கனிஷா இப்படி ஒரு பதிவை போட்டு தற்போது எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றி இருக்கிறார் என்று தான்.