உங்க படம் ஓட எங்க மானத்தை வாங்குவியா? கார்த்தியை வச்சு செய்த ப்ளூ சட்டை

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் திருப்பதி லட்டு விவகாரத்தில், டாப் தமிழ் நடிகர்களை கலாய்த்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன். திருப்பதியில் வழங்கப்படும் லட்டுகளில், நெய் சேர்ப்பதற்கு பதிலாக அதில் விலங்குகளின் கொழுப்பும், மீன் எண்ணெயும் சேர்க்கப்படுகிறது என்று பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

இது ஒரு பெரிய பூகம்பமாக வெடித்த நிலையில், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ் நாட்டை பொறுத்த வரையில் இந்த விவகாரம் ட்ரோல் மெட்டீரியலாக தான் மாறி உள்ளது. அந்த மாநிலத்தில் குற்றவாளியை காரில் அலைய விட்டுவிட்டு, தீர்வு காண்கிறோம் என்ற பெயரில் பரிகாரகம், சிறப்பு பூஜை, யாகம் என்று காமெடி பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி பட்ட சூழ்நிலையில், ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் க்கு போன கார்த்தி, அங்கு அங்கரால் சர்ச்சையில் சிக்கினார். ஆங்கர் லட்டு பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்க, நக்கலாக சிரித்து கொண்டே சென்சிடிவ் டாபிக் என்று சொன்னார். இது பெரும் சர்ச்சையாக மாறி, பவன் கல்யாண் கண்டனம் தெரிவிக்க, உடனடியாக மன்னிப்பு கேட்டார் கார்த்தி.

இப்போது அவருடைய அந்த மன்னிப்பை வேறு சில டாப் தமிழ் நடிகர்களோடு ஒப்பிட்டு, ஒட்டுமொத்தமாக அனைவரையும் கலாய்த்து வருகின்றார் இயக்குனரும், பிரபல திரைப்பட விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன். கார்த்தி மன்னிப்பு கூறியதை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக சில பதிவுகளை ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டு வருகிறார்.

அதில் “எங்கள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போல எந்த ஒரு விஷயத்தைப் பற்றி கேட்டாலும், எனக்கு அது பற்றி தெரியவே தெரியாது என்று சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள் கார்த்தி” என்று கூறியிருக்கிறார். மேலும், “இதுவே இந்த இடத்தில் கேப்டன் விஜயகாந்த் இருந்திருந்தால், அவர் நிச்சயம் எந்தவிதமான மன்னிப்பும் கேட்டிருக்க மாட்டார்.

பாகுபலி திரைப்பட ரிலீஸ் சமயத்தில் காவிரி விவகாரத்தில் முதலில் கர்நாடகாவிற்கு எதிராக பேசிய சத்யராஜ், தன்னுடைய பட ரிலீஸுக்காக உடனே மன்னிப்பு கேட்டார். இப்போது ஆந்திரா நடிகர் பவன் கல்யாணிடம் கார்த்தி இந்த லட்டு விவகாரத்தில் மன்னிப்பு கேட்டிருக்கிறார்” என்று கூறி சில பதிவுகளை அவர் வெளியிட்டு வருகிறார்.

கருத்தா பேசினாலும் புண்படும் படியா பேசுவதனால், ப்ளூ சட்டை மாறனை யாருக்கும் பிடிப்பதில்லை. கொஞ்சம் பக்குவமாக சொன்னால், தற்போது பெரிய லெவெலில் இருந்திருப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *