எப்பொழுதுமே விஜய் புது படங்களின் ஆடியோ லான்ச் திருவிழா போல் கலைக்கட்டும். ஆனால் கோட் படத்திற்கு ஆடியோ லான்ச் வேண்டாம் என்று விஜய்யே இந்த முறை முட்டுக்கட்டை போட்டு விட்டார். இதேபோல்தான் லியோவிற்கும் தடை போட்டு விட்டார் தளபதி.
கோட் படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாக உள்ளது. ஆகஸ்ட் 19ஆம் தேதி இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகிறது. இதுபோக இன்று இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் என ஒரு பாடல் வெளியாக உள்ளது. இப்படி அடுத்தடுத்து இந்த படத்தை பற்றிய அப்டேட்டுகளும், பிரமோஷன்களும் கலைகட்டி வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தின் அப்டேட் என தொடர்ந்து பாடல்களை வெளியிட்டு வருகின்றனர். இதுபோக தனியாக ஆடியோ லான்ச் எல்லாம் வைக்க வேண்டாம் என்று விஜய் கூறிவிட்டார். அதுவும் போக விஜய்க்கு அரசியல் கட்சி தொடர்பான முக்கிய வேலைகள் இந்த மாதம் இருக்கிறது.
பெரிய கதைக்கே நாள் பார்த்த தளபதி
விஜய் இந்த மாதம் தனது கட்சியின் கொடியை அறிவிக்கிறார். அதற்கு இதே மாதத்தில் நல்ல நாள் பார்த்து வருகிறார், அங்கே குட்டிக்கதை இல்லை பெரிய கதையே சொல்வார். இந்த வேலைக்கு தான் முதலில் முக்கியத்துவம் கொடுக்கிறார். அதனால் தான் கோட் படத்தின் ஆடியோ லான்ச் வேண்டாம் என்று முடிவு எடுத்துள்ளார்.
கோட் படத்தில் நான்கு நாள் மட்டும் சூட்டிங் பாக்கி இருக்கிறது. அந்த காட்சிகள் அனைத்தும் சென்னையிலேயே செட் போட்டு எடுக்கின்றனர். ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் இந்த படத்தின் சூட்டிங் முடிந்து விடுமாம். ஆகஸ்ட் 15க்குள் ட்ரெய்லருக்கு உண்டான வேலைகளையும் முடித்து 19 அன்று ரிலீஸ் செய்கிறார்கள்.