அமராவதி: விசாகப்பட்டினத்தில் விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீப்பிடித்த ரயிலில் இருந்து புகை பெருமளவு வந்ததால் பயணிகள் அலறினர்.
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில், கோர்பா செல்ல இருந்த விரைவு ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பி6, பி7, எம்1 ஆகிய பெட்டிகளில் தீ பற்றியது. விரைந்த தீயணைப்புத்துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
மீட்பு பணி
பயணிகள் அலாரத்தை இழுத்து எச்சரிக்கை செய்தனர். ஓடோடி வந்த ரயில்வே அதிகாரிகள், அனைத்து பயணிகளையும் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.