காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அநேக தங்காவதீஸ்வரர் கோவிலில் பூட்டை உடைத்து உற்சவர் சிலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே பிரசித்தி பெற்ற அநேக தங்காவதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு இன்று அதிகாலை சென்ற பக்தர்கள், கோவிலின் மூலஸ்தானத்தில் இருந்த சுவாமி சிலைகளை காணாமல் திடுக்கிட்டனர். ஒன்றரை அடி உயரமுள்ள சிவன், பார்வதி சிலைகள் திருடு போயிருந்தன.
விசாரணை
20 கிலோ எடையுள்ள செம்பு குடம், பித்தளை பாத்திரங்களையும் காணவில்லை. உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள், சுவாமி சிலைகளை திருடி, உண்டியலை உடைத்திருப்பது ஆய்வில் தெரியவந்தது. மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.