அசர வைக்கும் அம்சங்கள்.. வாவ் சொல்ல வைக்கும் ColorFit Pulse 4 Max ஸ்மார்ட் வாட்ச்!

இந்தியாவில் பிரபல வியரபிள் பிராண்டாக இருக்கும் Noise நிறுவனம், கடந்த ஏப்ரல் மாதம் ColorFit Pulse 4 என்ற ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது இதன் மேக்ஸ் வெர்ஷனான ColorFit Pulse 4 Max என்ற ஸ்மார்ட் வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது Noise நிறுவனம்.

இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச்சானது முன்பு அறிமுகமான ColorFit Pulse 4-ஐ விட பெரிய டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது மற்றும் AI அடிப்படையிலான வாட்ச் ஃபேஸ்களை உருவாக்க AI கிரியேட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த புதுமையான ஸ்மார்ட் வாட்ச் மேம்பட்ட அம்சங்களுடன் நிரம்பியுள்ளது, இது யூசர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தும். ColorFit Pulse 4 Max ஆனது ப்ளூடூத் காலிங் சப்போர்ட், IP68 ரைட்டிங், 7 நாட்கள் வரை பேட்டரி லைஃப் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *