டிராபிக் போலீசை காட்டி கொடுக்கும் கூகுள் மேப்.. அபராதம் இல்லாமல் எஸ்கேப்பாக இளைஞரின் டெக்னாலஜி

Google Map Traffic Police: எதிர்பாராத விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கலாம் என்ற நோக்கத்தில் இரு சக்கர வாகனத்தில் போகிறவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. ஆனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் விபத்துகளும் உயிரிழப்பு சம்பவங்களும் தொடர்ந்து கொண்டே வருகிறது. இதனால் இன்னும் இதை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் பைக்கில் பின்னாடி போகிறவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ரூல்ஸ் போடப்பட்டது.

அந்த வகையில் இருசக்கர வாகனத்தில் போகிறவர்கள் இரண்டு பேருமே ஹெல்மெட் அணிய வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. அந்த வகையில் சமீப காலமாக போக்குவரத்து காவலர்கள் சென்னையில் பல இடங்களில் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

டிராபிக் போலீஸ் இடம் இருந்து கிரேட் எஸ்கேப்

ஆனாலும் அனைவரும் பின்பற்றுவதில்லை. அதிலும் ஹெல்மெட்டை பைக்கில் கோர்த்து விட்டு அதை அணியாமல் போகிறார்கள். பிறகு அந்தப் பக்கம் ஹெல்மெட் சோதனை நடக்கிறது என்று தெரிந்தால் அப்பொழுது அந்த ஹெல்மெட்டை போட்டுக் கொண்டு போகிறார்கள். அதிலும் பைக்கில் போகும்பொழுது அவர்களுக்கு எதிர்மறாக வருபவர்கள் அங்கே போலீஸ் சோதனை செய்து வருகிறார்கள் என்று சிக்னல் காட்டி விடுகிறார்கள்.

உடனே ஹெல்மெட் இல்லாதவர்கள் வேறு வழியாக போய்விடுகிறார்கள். அப்படி இல்லை என்றால் ஹெல்மெட் பைக்கில் வைத்திருப்பவர்கள் அப்பொழுதுதான் எடுத்து போட்டுக்கொண்டு டிராபிக் போலீஸ் இடம் இருந்து எஸ்கேப் ஆகி விடுகிறார்கள். அந்த வகையில் இளைஞர் ஒருவர் வேளச்சேரி பகுதியில் “போலீஸ் இருக்காங்க ஹெல்மெட் போட்டுக்கோங்க” என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு அந்த வழியாக வருபவர்களை அலாட் பண்ணி இருக்கிறார்.

தற்போது இந்த ஒரு விஷயம் வைரலாகி கொண்டு வரும் சமயத்தில் சென்னையில் எந்தெந்த இடங்களில் போக்குவரத்து போலீசார் இருக்கிறார்கள் என்பதை காட்டிக் கொடுக்கும் வகையில் போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க என்று டிராபிக் போலீசை காட்டிக் கொடுக்கும் வகையில் குறிப்புகள் கூகுள் மேப்பில் இடம்பெற்றால் பலரும் ஹெல்மெட் அணிய தொடங்குவார்கள்.

அதனால் இது சம்பந்தமான ஒரு டெக்னாலஜியை கண்டுபிடித்தால் எல்லா மக்களும் விழிப்புணர்வுடன் ஹெல்மெட் அணிய தொடங்கி விடுவார்கள். விபத்துகளையும் குறைக்கலாம் அபராதம் இல்லாமல் எஸ்கேப் ஆகிவிடலாம். எதுக்கெல்லாமோ டெக்னாலஜியை கண்டுபிடித்து வரும் இந்த சமயத்தில் இளைஞர் ஒருவர் அபராதத்தை கட்டாமல் எஸ்கேப் ஆகும் விதமாக இதற்கும் ஒரு வழியை கண்டுபிடிச்சிட்டார்.

எல்லா பக்கமும் பரவி வரும் AI டெக்னாலஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *