சென்னை: பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மற்றும் சில கட்சிகளின் நிர்வாகிகள் உட்பட 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவத்தில் சிறையில் இருக்கும் ரவுடியான நாகேந்திரனின் மகனும், இளைஞர் காங்., முதன்மை பொதுச்செயலாளர் ஆக இருந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவரை விசாரணைக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். ஆம்ஸ்டிராங் இறந்த 16வது நாளில் நினைவேந்தல் போஸ்டரை அஸ்வத்தாமன் ஒட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அஸ்வத்தாமனை கட்சியில் இருந்து நீக்கி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.