ரொம்ப கஷ்டப்பட்டு கோட் படம் ட்ரைலரை வெளியிட நல்ல நாள் பார்த்து விட்டனர். ஏற்கனவே இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளிவந்து விட்டது. அதனால் விஜய் இந்த படத்திற்கு ஆடியோ லான்ச் வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார். அது மட்டுமின்றி அரசியல் சம்பந்தப்பட்ட வேலைகள் அவருக்கு நிறைய இருக்கிறது.
இந்த மாதத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்துகிறார் தளபதி விஜய். அதனால் கடும் பிஸியாக சுற்றி வருகிறார். கோட் படம் போஸ்ட் ப்ரோடக்சன் வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது. செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு இந்த படம் ரிலீஸ் ஆகிறது
இந்த படத்தினை தயாரிப்பாளர் ஏஜிஎஸ் தரப்பிற்கு போட்டுக் காட்டி விட்டனர். படக் குழுவினர் விஜய்க்கு இது பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என ஆர்ப்பரித்து வருகின்றார்கள். கோட் படத்தில் வரும் ஸ்பார்க் பாடல் காட்சியில் விஜய்யை சிறுவயது காலேஜ் பையனாக காட்டுகிறார்கள்.
ஆகஸ்ட் 19ஆம் தேதி கோட் படத்தின் ட்ரெய்லர் வெளிவர இருக்கிறது. அந்த நாளை தேர்ந்தெடுத்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி என்பதால் இந்த நல்ல நாளை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
மொத்த திமுகாவும் போடும் கொண்டாட்டம்
இதே நாளில் தான் திமுக தலைவர் மு க ஸ்டாலின் உதயநிதியை துணை முதல்வராக அறிவிக்க உள்ளார். அதனால் திமுக கட்சியும் கொண்டாட்டத்தில் இருக்கிறது. இதனால் கோட் படத்தின் டிரைலருக்கு கொஞ்சம் ஹைப் குறையும். இதை போல் அஜித்தும் அவர் பங்கிற்கு எதையாவது வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.