Raghu Thatha Movie Review-இந்தி திணிப்பு, ஆணாதிக்கத்தை பேசும் ரகு தாத்தா.. ஸ்கோர் செய்தாரா கீர்த்தி சுரேஷ், முழு விமர்சனம்

Keerthy Suresh: பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இப்போது அதேபோல் உமன் சென்ட்ரிக் படமான ரகு தாத்தா படத்தில் நடித்திருக்கிறார். சுமன் குமார் இயக்கத்தில் உருவாக்கியிருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.

1960களில் இந்தியாவை இந்திரா காந்தி ஆட்சி செய்து வரும்போது வள்ளுவன் பேட்டை என்ற கிராமத்தில் வங்கி ஊழியராக பணிபுரிந்து வரும் கயல்விழி பாண்டியன் (கீர்த்தி சுரேஷ்) இந்தி திணிப்புக்கு எதிராக போராடுகிறார். தமிழ் மொழி மீது மிகுந்த பற்று வைத்திருக்கும் அவர் பெண்ணிய சிந்தனையும், பெரியார் கொள்கையையும் பின்பற்றி வருகிறார்.

அதோடு ஒரு ஆணின் பெயரில் சிறுகதைகளையும் எழுதி வருகிறார். இந்த சூழலில் வங்கியில் உயரிய பதவிக்கு செல்ல வேண்டும் என்றால் ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என அதிகாரி சொல்கிறார். இதைக் கேட்டு ஆரம்பத்தில் ஆத்திரம் கொள்கிறார் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா விமர்சனம்

மற்றொருபுறம் உடல்நிலை மோசமாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் தாத்தாவின் (எம் எஸ் பாஸ்கர்) கடைசி ஆசை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்பதுதான். இதனால் தன்னை மிகுந்த முற்போக்கு சிந்தனை உடையவராக காட்டிக்கொள்ளும் ரவீந்தர விஜய்யை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார்.

ஆனால் ஆணாதிக்க வாதியாக இருக்கும் ரவீந்தர் பெண் அடிமைத்தனத்தை ஆதரித்து வருகிறார். இந்த உண்மையை தெரிந்து கீர்த்தி சுரேஷ் ரவீந்தரை திருமணம் செய்து கொள்கிறாரா, ஹிந்தி திணிப்பை வெறுக்கும் அவர் ஏன் ஹிந்தி கற்றுக் கொள்கிறார், எம் எஸ் பாஸ்கரின் கடைசி ஆசை நிறைவேறியதா என்பதுதான் ரகு தாத்தா படத்தின் மையக்கதை.

ரகு தாத்தா படத்தை நகைச்சுவையாக கொண்டு சென்றிருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேலும் படத்தில் அடுத்து என்ன என்று சஸ்பென்ஸ் வைக்கும்படி எந்த காட்சிகளும் அமையவில்லை. இயக்குனர் திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருந்தால் ரகு தாத்தா படம் ஸ்கோர் செய்து இருக்கும்.

சினிமாபேட்டை ரேட்டிங் : 2.5/5

உமன் சென்ட்ரிக் படங்களில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *