நடிகைன்னா அவ்வளவு இளக்காரமா.. டாக்டர் மீது பாய்ந்த வழக்கு, அப்ப பயில்வான் கதி.?

Bayilvan Ranganathan: மலையாள திரை உலகில் ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு பிறகு பல எதிர்பாராத சம்பவங்கள் நடந்து வருகிறது. அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் வம்பு செய்யும் ஹீரோக்களின் முகத்திரையை நடிகைகள் கிழித்தெறிந்து வருகின்றனர்.

இதில் ஜெயசூர்யா, நிவின் பாலி உள்ளிட்ட பலரின் மீது கூட குற்றச்சாட்டு எழுந்தது. மீடியாக்களின் கவனத்தை ஈர்த்த இந்த சம்பவத்தை தொடர்ந்து கோலிவுட்டிலும் இந்த அலை வீசியது. இது தொடர்பாக சமீபத்தில் நடிகர் சங்கம் சில தீர்மானங்களை நிறைவேற்றியது.

அதன்படி நடிகைகளுக்காக புது கமிட்டி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக நடிகை ரோகிணி நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் நடிகைகளுக்கு ஏற்படும் அட்ஜஸ்ட்மென்ட் தொடர்பான பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும்.

அதேபோல் சமூக வலைத்தளங்களில் நடிகைகள் குறித்து அவதூறு பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தனர். அதன்படி தற்போது யூடியூப் தளத்தில் பிஸியாக பேட்டிகள் கொடுத்து வரும் டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இவர் கொடுக்கும் பேட்டிகள் அனைத்துமே நடிகைகள் சம்பந்தப்பட்டதாக தான் இருக்கும். அதில் எம்ஜிஆர் காலத்து நடிகைகள் முதல் தற்போது நம்பர் 1ல் இருக்கும் ஹீரோயின்கள் வரை இவர் விமர்சித்தது உண்டு.

பரபரப்பை கிளப்பிய காந்தராஜின் பேட்டி

அதிலும் அட்ஜஸ்ட்மென்ட் சினிமாவில் சர்வசாதாரணம் என பல முரண்பாடான கருத்துக்களையும் இவர் கூறியிருந்தார். சமீபத்தில் கூட இவர் அளித்த ஒரு பேட்டியில் நடிகைகளை மிகவும் மோசமாக சித்தரித்து பேசி இருந்தார்.

அதன் விளைவாக ரோகிணி இவர் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் நடிகைகள் பற்றி மோசமாக பேசும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சம்பந்தப்பட்ட அந்த வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து தற்போது டாக்டர் மீது பெண்களை அவதூறாக பேசுதல் தனிநபரை அவமதித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தமிழ் திரையுலகில் உருவாகி இருக்கும் ஒரு நல்ல மாற்றமே.

கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக மற்றவர்களை பற்றி அவதூறாக பேசுவது நிச்சயம் தவறுதான். அப்படி பார்த்தால் இதைவிட மோசமாக பயில்வான் ரங்கநாதன் பேசி வருகிறார். ஆனால் அவர் மீது இன்னும் ஏன் வழக்குப் பாயவில்லை என்ற கேள்வி தற்போது முளைத்துள்ளது.

முன்னதாக ராதிகா, ஷகிலா, ரேகா நாயர் என பலரும் பயில்வான் ரங்கநாதனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் சங்கத்தின் அடுத்த ஆப்பு பயில்வானுக்காக கூட இருக்கலாம்.

டாக்டர் மீது ரோகிணி கொடுத்த புகார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *