இந்தவாட்டி தலைவர் ஆடு கதை சொல்வாரோ.. வேட்டையன் படத்தின் ஆடியோ லான்ச் எங்க எப்ப நடக்குது தெரியுமா.?

Vettaiyan: சூப்பர் ஸ்டார் வேட்டையன் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு கூலி படத்தில் பிஸியாக இருக்கிறார். அதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தலைவர் ஆடிய ஆட்டம் வைரலாகி வருகிறது. அதேபோல் வேட்டையன் முதல் பாடலான மனசிலாயோ சோசியல் மீடியாவில் சக்கை போடு போட்டு வருகிறது.

லைக்கா தயாரிப்பில் ஜெய் பீம் ஞானவேல் இயக்கியுள்ள படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே நாளில் ரிலீஸ் ஆக இருந்த கங்குவா இப்போது தலைவருக்கு வழிவிட்டு நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

இப்படி தலைவரின் அலப்பறை ஜோராக ஆரம்பித்த நிலையில் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்ற தகவலும் கசிந்துள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சியில் நடைபெற இருக்கிறது.

vettaiyan
vettaiyan

சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்

அதில் ரஜினிஅமிதாப் பச்சன் ஆகியோருடன் படத்தில் நடித்த அத்தனை பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதேபோல் அனிருத்தின் ஸ்பெஷல் பெர்ஃபார்மன்ஸ் கூட இருக்கிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் தலைவர் விழா மேடையில் இந்த முறை என்ன கதை சொல்லப் போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. ஏனென்றால் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின்போது அவர் சொன்ன கழுகு காக்கா கதை பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியது.

தலைவர் விஜயை தான் குறி வைத்து பேசி இருக்கிறார் என்று கூட பஞ்சாயத்து கிளம்பியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் லியோ வெற்றி கொண்டாட்டத்தில் இதைப் பற்றி பேசி அடுத்த பிரச்சனைக்கு தூபம் போட்டார்.

அதனாலேயே வேட்டையன் இசை வெளியீட்டு விழாவை ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஏனென்றால் சமீபத்தில் தான் விஜயின் கோட் படம் வெளியாகி வசூலில் மாஸ் காட்டி வருகிறது. அதனாலயே தலைவர் இந்த முறை ஆடு கதை சொல்வாரோ என ரசிகர்கள் தீவிரமாக சிந்தித்து வருகின்றனர்.

வேட்டையன் மூலம் மாஸ் காட்ட வரும் ரஜினி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *