CWC 5 டைட்டில் வின்னர் யார் தெரியுமா.? விஜய் டிவி செய்த தில்லாலங்கடி வேலை

CWC 5 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. கடந்த எபிசோடில் சுஜிதா முதல் ஆளாக இறுதிச் சுற்றுக்கு தகுதியான நிலையில் இரண்டாவதாக தொகுப்பாகளினி பிரியங்கா தேர்வாகினார்.

அதன்பிறகு யூடியூபர் இர்பான் மூன்றாவது பைனல் லிஸ்ட்டாக உள்ளே நுழைந்தார். இந்த வாரம் வையல் கார்டு நடக்க இருக்கிறது. இதைத்தொடர்ந்து இப்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி எபிசோடையும் எடுத்து முடித்து விட்டனர்.

இன்னும் இரண்டு வாரங்களில் அது ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சூழலில் திடீரென இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த மணிமேகலை விலகி இருக்கிறார். தனக்கு தன்மானம் மிக முக்கியம் என்று வீடியோவும் வெளியிட்டு அதிர்ச்சி கிளப்பி இருக்கிறார்.

குக் வித் கோமாளி சீசன் 5 வெற்றியாளர்

சூசகமாக பெயரைக் குறிப்பிடாமல் பிரியங்காவால் தன்னால் வேலையை சரியாக செய்ய முடியவில்லை, சுயமரியாதை தனக்கு முக்கியம் என்று மணிமேகலை கூறியிருந்தார். இந்நிலையில் மணிமேகலைக்கு சப்போர்ட்டாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

மேலும் பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்வதாக விஜய் டிவி மீது இப்போது ஒரு தவறான அபிப்பிராயம் வர தொடங்கியுள்ளது. இதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக பிரியங்கா தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

வேண்டுமென்றே தில்லாலங்கடி வேலை பார்த்து பிரியங்காவை விஜய் டிவி ஜெயிக்க வைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மேலும் இந்நிகழ்ச்சியில் பிரியங்கா வெற்றியாளர் என்று ஒளிபரப்பு செய்தால் கண்டிப்பாக ரசிகர்கள் கொந்தளிக்க வாய்ப்பிருக்கிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடக்கும் பஞ்சாயத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *