விடாமுயற்சியில் தொடர்ந்து ஏற்படும் குழப்பம்.. தீபாவளிக்கு ரிலீசாகுமா.?

Ajith: அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் இப்போ, அப்போ என இழுத்துக் கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. இந்த அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் அப்போது ரஜினியின் வேட்டையன் படம் வெளியாக இருக்கிறது.

அதற்கான ஏற்பாடுகளும் இப்போது அனல் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. இதனால் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளி போனது. அதன்படி தீபாவளிக்கு விடாமுயற்சியை வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருக்கின்றனர். படத்தில் ஒரு பாடல் காட்சியை மட்டும் இன்னும் படமாக்கப்பட வேண்டி இருக்கிறதாம்.

இத்தாலியில் இதற்கான படப்பிடிப்பை நடத்த முடிவெடுத்திருக்கின்றனர். தீபாவளிக்குள் இந்த பாடலை எடுத்து முடிக்கவில்லை என்றால் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து பொங்கல் வரை இதை இழுத்தடிக்க தயாராக இல்லை என்று கூறியுள்ளனர்.

விடாமுயற்சி ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட குழப்பம்

அதாவது டிசம்பர் மாதத்தில் இறுதிக்குள்ளாவது விடாமுயற்சி படம் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக கொடுக்க உள்ளனர். ஏனென்றால் ஒரே மாதத்தில் அஜித்தின் இரண்டு படங்கள் வெளியாகுவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறிதான்.

ஏனென்றால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் குட் பேட் அக்லி படம் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்திருந்தது.

ஆகையால் அதற்கு முன்னதாக எப்படியும் விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்து விட வேண்டும் என்று லைக்கா மும்மரம் காட்டி வருகிறது. மேலும் இந்த படத்தில் அஜித் உயிரை கொடுத்து பல காட்சிகளில் நடித்துள்ளார் என்பது சில வீடியோக்கள் மூலம் தெரியவந்தது. அந்த காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

ஆர்ப்பாட்டம் இல்லாத அஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *