திரிஷா, சினேகாவை தொடர்ந்து விஜய் உடன் ஜோடி போடும் 90ஸ் ஹீரோயின்.. தளபதி 69 இல் இணைந்த நடிகை

Vijay : பொதுவாக சினிமாவை பொருத்தவரையில் ஹீரோயின்களின் காலம் என்பது மிகக் குறுகியதுதான். குறைந்த வருடங்கள் மட்டும் ஹீரோயினாக நடித்துவிட்டு அதன் பிறகு அம்மா, அண்ணி, அக்கா போன்ற கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அதுவும் தங்கள் உடன் ஜோடி போட்டு நடித்த ஹீரோக்களுக்கே அக்கா, அண்ணியாக நடித்த கதைகளும் உண்டு. மேலும் பெரிய ஹீரோக்களின் படங்களில் அப்போது ட்ரெண்டிங்கில் உள்ள கதாநாயகிகள் நடிப்பதுதான் வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால் இப்போது விஜய்யின் படங்களில் 90ஸ் ஹீரோயின்கள் அதிகம் இடம் பெற்று வருகிறார்கள். அந்த வகையில் லியோ படத்தில் 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா ஜோடி போட்டு நடித்திருந்தார். அதேபோல் இப்போது கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா 22 வருடங்களுக்கு பிறகு ஜோடியாக நடித்திருந்தார்.

தளபதி 69 இல் இணைந்த பிரபலம்

இப்போது தளபதி 69 படத்திலும் 90ஸ் கதாநாயகி உடன் விஜய் நடிக்க இருக்கிறார். அதாவது என்றும் இளமை மாறாமல் இருக்கும் சிம்ரன் தான் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜய், சிம்ரன் நடிப்பில் வெளியான துள்ளாத மனம் துள்ளும் மற்றும் பிரியமானவளே படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

அதோடு விஜய்யின் யூத் படத்தில் சிம்ரன் ஆல்தோட்ட பூபதி என்ற பாடலில் குத்தாட்டம் போட்டிருப்பார். விஜய்க்கு ஈடு கொடுத்து ஆடக்கூடியவர் என்றால் சிம்ரன் தான். இப்போது 24 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் சிம்ரன் இணைய இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் இந்த படத்தில் பிரேமலு படத்தில் நடித்த மலையாள நடிகை மமீதா பைஜியும் நடிக்கிறார். வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. மற்ற பிரபலங்களின் பெயர்கள் விரைவில் வெளியாக உள்ளது.

ஆரம்பிக்கப் போகும் தளபதி 69

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *