பா ரஞ்சித்தை வெறுத்து ஒதுக்குவதற்கான காரணம்.. வாழையை தலையில் தூக்கி வைத்து ஆடும் திருமா

Vaazhai: தமிழ் சினிமாவில் இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் ஒரே மாதிரியான பாதையில் பயணிக்க கூடியவர்கள். ஆரம்பத்தில் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய போது மாரி செல்வராஜ் ஒரு நல்ல இயக்குனராக தெரிந்தார்.

அடுத்தடுத்து அவர் பேசிய அரசியல் படங்கள் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் அதிர செய்தது என்று தான் சொல்லலாம். ஒரு படம் முடிவதற்கு முன்னாடியே தியேட்டரில் இருந்து எழுந்து போகும் கூட்டத்தை கேள்விப்பட்டிருப்போம்.

படம் முடிந்து எண்டு கார் கேம் ஓட்டும் சீட்டை விட்டு எழுந்திருக்காத மக்கள் கூட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் என்றால் அது வாழை படத்தில் தான். மாரி செல்வராஜ் தன்னுடைய இளம் வயது வாழ்க்கையை பற்றி இந்த படத்தில் எதார்த்தமாக பேசி வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்களான் படம் ரிலீஸ் ஆனது எல்லோருக்கும் தெரியும். இந்த படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை தான் பெற்றது.

பா ரஞ்சித்தை வெறுத்து ஒதுக்குவதற்கான காரணம்

தற்போது சினிமாவில் இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி ஏற்ற இறக்கத்தை கண்டிருக்கிறது என்பதை தாண்டி இந்த இரண்டு படங்களும் உறுதியான ஒரு அரசியலை பேசி இருக்கின்றன. அதாவது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் தொகுதியில் எம் பி திருமாவளவன் வாழை படத்திற்காக மாரி செல்வராஜிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

வாழ்த்து தெரிவித்ததில் என்ன அரசியல் இருக்கிறது என்று தான் எல்லோருக்கும் தோன்றும். அதற்கு முந்தைய வாரத்தில் ரிலீசான தங்கலாம் படத்திற்கு திருமாவளவன் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் திருமாவுக்கு பா ரஞ்சித் ரொம்பவும் நெருக்கமானவர்.

இவர்களுடைய உறவில் விரிசல் விழுந்தது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கொலையில் தான். ஆர்ம்ஸ்ட்ராங்கின் கொலையை எதிர்த்து போராட்டம் செய்த இயக்குனர் பா ரஞ்சித் நேரடியாக ஆளும் கட்சியை விமர்சித்தார்.

மேலும் ஆளும் கட்சியை எதிர்த்து போராட்டம் செய்ய தன்னுடைய சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அந்த நேரத்தில் திருமாவளவன் ஆம்ஸ்ட்ராங் இறப்பு சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கட்சி தலைமையின் உத்தரவு இல்லாமல் பங்கெடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்.

இதிலிருந்து ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் பா ரஞ்சித் மற்றும் திருமாவளவன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட தொடங்கிவிட்டது. அதுதான் தற்போது வாழை படத்தின் ரிலீஸ் சமயத்தில் உறுதியாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *