கும்பலாக ராஜினாமா செய்த 17 நிர்வாகிகள்.. வாயை திறக்காத லாலேட்டன், விஸ்வரூபம் எடுத்த விவகாரம்

Mohanlal: நடிகைகளின் அடுத்தடுத்த அட்ஜஸ்ட்மென்ட் புகாரால் கேரள திரையுலகம் தற்போது பரபரப்பாகி உள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் நடந்த விசாரணையின் அறிக்கை வெளியான பிறகு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகளை அடுத்தடுத்து வெளியிட ஆரம்பித்தது அதிர்வலையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் பெங்காலி நடிகையான ஸ்ரீலேகா மித்ரா இயக்குனர் ரஞ்சித் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் மலையாள சினிமா அகாடமி தலைவராக இருக்கும் அவர் பதவி விலக வேண்டும் என கூறியிருந்தார். அதையடுத்து அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து சித்திக், ஜெயசூர்யா, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் மீதும் புகார்கள் எழுந்தது.

பதவி விலகிய மோகன்லால்

இதனால் மலையாள அம்மா அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த சித்திக் பதவி விலகினார். மேலும் இந்த விவகாரத்தில் அம்மா அமைப்பின் தலைவராக இருக்கும் மோகன் லால் வாய் திறக்காமல் மௌனமாக இருப்பதும் விமர்சனமானது.

இதனால் இன்று அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் மட்டுமல்லாமல் அந்த அமைப்பில் இருந்த 17 நிர்வாகிகளும் கூட்டமாக பதவி விலகியுள்ளனர். இதனால் இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக நடிகர் பிரித்விராஜ் இந்த குற்றங்கள் குறித்து ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட வேண்டும். அப்படி நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். ஆனால் இது பொய்யான தகவல் என்றால் அந்த புகாரை கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பேசி இருந்தார்.

இந்த சூழலில் மொத்த நிர்வாகிகளும் ராஜினாமா செய்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மை என்ன என பேசாமல் ஒவ்வொருவராக பதவி விலகுவது ஏன் எனவும் தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகிறது.

மலையாளத் திரை உலகில் விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *