‘சமக்ரா சிக் ஷா’ திட்ட நிதியை வழங்குங்க: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

சென்னை : ‘சமக்ரா சிக் ஷா’ திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை, விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

Advertisement

கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:


தமிழகம் மற்றும் சில மாநிலங்களுக்கு, ‘சமக்ரா சிக் ஷா’ திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய, முதல் தவணை நிதி விடுவிக்கப்படவில்லை. நாட்டின் கல்வித்துறையில் மத்திய அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் முதன்மையான திட்டம் இது என்பதால், உரிய நேரத்தில் நிதியை விடுவிப்பது அவசியம்.

நடப்பாண்டு தமிழகத்திற்கு, 3,586 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், மத்திய அரசின் பங்கு 60 சதவீதம், அதாவது 2,152 கோடி ரூபாய். இந்நிதியை பெறுவதற்கான முன்மொழிவுகள், ஏப்ரலில் சமர்ப்பிக்கப்பட்டன. எனினும் முதல் தவணையான, 573 கோடி ரூபாய் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இது தவிர முந்தைய ஆண்டுக்கான, 249 கோடி ரூபாயையும், மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. தமிழக எம்.பி.,க்கள் கடந்த மாதம் மத்திய அமைச்சரை சந்தித்து, உரிய நேரத்தில் மானியங்களை விடுவிக்கும்படி, கோரிக்கை விடுத்தனர். ஆனாலும், இதுவரை மாநில அரசுக்கு மானியம் விடுவிக்கப்படவில்லை.

சமீபத்தில், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளில், தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்தினால் தான், தற்போதைய சமக்ரா சிக் ஷா திட்டத்தின் கீழ், நிதியை அனுமதிக்க முடியும் என்பதை, நிபந்தனையாக இணைக்க மத்திய அரசு முயற்சித்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *