BB7-ல் இதுதான் நடந்தது, மாயா போட்ட இன்ஸ்டா பதிவு.. மிரண்டு போன சேனல், சோனமுத்தா போச்சா!

பிக் பாஸ் : பிக் பாஸ் சீசன் 8 விரைவில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், சீசன் 7 போட்டியாளர் மாயகிருஷ்ணன் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை ஷேர் செய்திருக்கிறார். ஒரு வருடமாக அந்த நிகழ்ச்சி குறித்து வாயை திறக்காத மாயா இப்படி ஒரு விஷயத்தை பகிர்ந்து இருப்பது பெரிய அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

ஏழு சீசன்களை தொகுத்து வழங்கிய கமலஹாசன், இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இது குறித்த ப்ரோமோ நேற்று வெளியாகியிருந்தது.

மக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை கருத்தாக சொல்வது போல் இந்த வீடியோ இருந்தது. இந்த வீடியோ வெளியான கொஞ்ச நேரத்தில் மாயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து பதிவிட்டு இருக்கிறார்.

மாயா போட்ட இன்ஸ்டா பதிவு

அந்த பதிவில், முதலில் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதன்பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியை மக்கள் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றுதான் எல்லாம் நடக்குமே தவிர நியாயமான தீர்ப்பு, யார் நல்லவர் கெட்டவர் என்பதெல்லாம் இங்கு கிடையாது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேடுக்கும் போட்டியாளர்கள் அந்த சேனல் சொல்லும் வேலையை செய்பவர்கள்.

உங்களுக்கு தெரியாத நிறைய ரகசியங்கள் மற்றும் உண்மைகள் இருக்கிறது. தயவுசெய்து எட்டாவது சீசனில் இருந்து பாரபட்சம் பார்க்காமல் எல்லோருக்கும் ஆதரவு அளியுங்கள். வீட்டிற்குள் இருப்பவர்கள் என்ன ஆடை அணிய வேண்டும், என்ன பேச வேண்டும் என நெருக்கடி கொடுக்காதீர்கள்.

ஒருவருக்கு கோபம் வருவது என்பது இயல்பான விஷயம். கோபப்பட்டு சண்டை போடுபவர்களை கேரக்டர் சரியில்லை என்று வெளியில் இருந்து சர்டிபிகேட் கொடுக்காதீர்கள். இந்த சீசனுக்கு போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்.

வெளியில் உங்களுக்கு எவ்வளவு வெறுப்பு இருக்கிறது என்பதை பற்றி யோசிக்காதீர்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் உங்களுக்கு எவ்வளவு பேர் நண்பர்களாக இருக்கிறார்கள் என்பதை மட்டும் பாருங்கள். சமூக வலைதளங்களை பொறுத்த வரைக்கும் எந்த ஆதாரமும் இல்லாமல் வதந்திகளை பரப்பத்தான் செய்வார்கள்.

அது உங்களுடைய கேரக்டரை தீர்மானிக்காது. அதனால் அதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல், எந்த டிராமாவும் செய்யாமல் நீங்கள் நீங்களாக இருங்கள். பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே உங்களுக்கென்று ஆதரவாளர்களை உருவாக்கி விட்டு வருவது நல்ல விஷயம் தான்.

ஆனால் தயவுசெய்து உங்கள் பி ஆர் ஏஜென்சி ஆட்களை வைத்து மற்ற போட்டியாளர்கள் மீது வெறுப்பை விதைக்காதீர்கள். வெளியில் இது போன்ற வெறுப்புகள் அதிகமாவதால் கொலை மிரட்டல் முதல் வன்கொடுமை மிரட்டல் வரை அதிகமாக இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு அழகான மைண்ட் கேம். இதை சரியாக விளையாடுங்கள். பணம் சம்பாதிங்கள். இந்த நிகழ்ச்சியை நிறைய பேரில் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது, அதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.

எனவே தைரியமாக விளையாடுங்கள் என வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார். அத்தோடு மட்டுமில்லாமல் பெண் ஒருவர் மற்றவர்களிடம் உதவி கேட்பதற்கு தயங்குவது அல்லது தனக்கு பாதுகாப்பு இல்லாத இடத்தில் உமன் கார்டு உபயோகிப்பதை தயவுசெய்து கிண்டல் மற்றும் கேலியாக பேசாதீர்கள் என சூசகமாக பதிவிட்டு இருக்கிறார்.

நிகழ்ச்சி முடிந்து ஒரு வருடம் கழித்து மாயா இப்படி ஒரு பதிவை போட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. மாயா இந்த பதிவை போட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே ஐசு மற்றும் நிக்சன் தங்களுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *