ராயன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ரசிகர்களை கவர்ந்த வாட்டர் பாக்கெட் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
ராயன் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படத்தில் இடம்பெற்ற வாட்டர் பாக்கெட் பாடலின் காட்சிகள் பெரிதாக ரசிக்க வைத்தது.நடிகர்கள் சந்தீப் கிஷனுக்கும் அபர்ணா பாலமுரளிக்கும் இடையான காதல் காட்சிக்காக இப்பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இதனை, கானா காதர் என்பவர் எழுதியிருக்கிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர்.
இப்பாடலின் விடியோவை எப்போது வெளியிடுவார்கள் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் இப்பாடல் விடியோவை வெளியிட்டுள்ளனர்.