Jayam Ravi: ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவகாரத்து சர்ச்சை முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ட்விட்டரில் தனது மனைவி ஆர்த்தி இடம் இருந்து விவாகரத்து பெற உள்ளதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்தார். தனக்கு தெரியாமல் ரவி தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளதாக ஆர்த்தி குற்றம் சுமத்தி இருந்தார்.
இதை அடுத்து ஜெயம் ரவிக்கு பாடகி ஒருவருடன் தொடர்பு என்று கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெயம் ரவி, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இன்னொருவரை சம்பந்தபடுத்த வேண்டாம் என்று கூறியிருந்தார். மேலும் வாழு வாழ விடு என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.
இதைதொடர்ந்து ஆரம்பத்தில் ஆர்த்தி ஜெயம் ரவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கினார். அதன் பிறகு தான் ஜெயம் ரவி விவாகரத்து அறிக்கையை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து இத்தனை வருடமாக ஜெயம் ரவியின் இன்ஸ்டா கணக்கை ஆர்த்தி தான் நிர்வாகித்து வந்துள்ளார்.
ஜெயம் ரவி இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்டவுடன் செய்த முதல் வேலை
இதனால் மெட்டாவிடம் தனது கணக்கை மீட்டு தர சொல்லி ஜெயம் ரவி கோரிக்கை வைத்திருந்தார். மேலும் அவரின் கோரிக்கையை ஏற்று இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்டெடுத்துள்ளார். மேலும் முதல் வேலையாக தன்னுடைய பிரதர் படத்தின் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.
அதோடு இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி இணைந்துள்ள புகைப்படத்தை ஜெயம் ரவியும் நீக்கிவிட்டார். இவர்கள் எப்படியும் இணைந்து விடுவார்கள் என்று ரசிகர்களுக்கு சிறு நம்பிக்கை இருந்த நிலையில் ஜெயம் ரவியின் இந்த செயலால் இனி சேர வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
மேலும் குழந்தைகள் இப்போது ஜெயம் ரவியுடன் இருப்பதாக கூறியுள்ளார். இவர்களுக்குள் சமூகமாக விவாகரத்து கிடைக்கவும் வாய்ப்புள்ளதா என்பது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் ஆர்த்தி விவாகரத்து கொடுக்க சம்மதம் தெரிவிப்பாரா என்பது சந்தேகம்தான்.