சூப்பர் ஸ்டாருடன் மோதுகிறாரா அகில உலக சூப்பர் ஸ்டார்.? 4 வருட போராட்டத்திற்குப் பிறகு வெளியான மிர்ச்சி சிவாவின் சுமோ அப்டேட்

Sumo Movie Update: இந்த ஆண்டின் முதல் பாதி டல்லாக இருந்தாலும் இரண்டாம் பாதி சுறுசுறுப்பாக இருக்கிறது. அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்கள் வெளிவந்து கோடிக்கணக்கில் வசூலை வாரி குவித்து கொண்டிருக்கிறது.

sumo-siva
sumo-siva

சமீபத்தில் விஜயின் கோட் வெளியாகி 400 கோடியை தாண்டி வசூல் லாபம் பார்த்துள்ளது. அதை அடுத்து ரசிகர்கள் இப்போது சூப்பர் ஸ்டாரின் வேட்டையனை ஆர்வத்தோடு எதிர்பார்த்து வருகின்றனர். ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

தலைவர் வருகிறார் என்றதுமே சூர்யாவின் கங்குவா கூட இப்போது நவம்பர் மாதத்திற்கு சென்று விட்டது. ஆனால் அகில உலக சூப்பர் ஸ்டார் மிரச்சி சிவா தைரியமாக அக்டோபர் மாதத்தில் களம் காண இருக்கிறார்.

அக்டோபர் மாத போட்டிக்கு தயாரான சிவா

அதாவது வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் சார்பில் கடந்த 2020ல் சுமோ படம் தொடங்கியது. எஸ் பி ஹோசிமின் இயக்கத்தில் சிவா உடன் இணைந்து பிரியா ஆனந்த், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

குழந்தைகளை கவரும் வகையில் முழு நீள காமெடி கதை அம்சத்தில் இப்படம் உருவாகி உள்ளது. மேலும் எப்போதோ ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய சுமோ கொரோனா, ஊரடங்கு என ஏகப்பட்ட தடைகள் வந்ததால் கிடப்பில் கிடந்தது. தற்போது அதற்கு ஒரு விடிவு காலம் கிடைத்துள்ளது.

அதன்படி இப்படம் வரும் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால் ரிலீஸ் தேதி மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் ரசிகர்கள் அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினியோடு மோதுகிறார் என இப்பவே பத்த வைக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கும். மேலும் தீபாவளியை முன்னிட்டு அமரன், ப்ளடி பெக்கர், பிரதர் ஆகிய படங்கள் வெளியாகிறது. அந்த லிஸ்டில் சுமோவும் இணையலாம் என்கின்றனர். இருப்பினும் இன்னும் சில வாரங்களில் ட்ரெய்லரோடு இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு வருடங்களுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் சுமோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *