பிரியங்காவின் சொம்பாவுக்கு இருக்கும் விஜய் டிவி.. வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சம்பவம்

Vijay Tv: விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரியங்கா கலந்து கொண்டுள்ளார். இதே நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த மணிமேகலைக்கும், பிரியங்காவுக்கும் வாக்குவாதம் ஈடுபட்டது. இதன் காரணமாக இந்நிகழ்ச்சியில் இருந்த மணிமேகலை வெளியேறி விட்டார்.

அதோடு தனது யூடியூப் சேனலிலும் மணிமேகலை ஏன் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டேன் என்பதற்கான வீடியோவும் வெளியிட்டு இருந்தார். தன்னுடைய தொகுப்பாளர் வேலையை செய்ய விடாமல் பிரியங்கா குறுக்கிட்டதால் பிரச்சனை ஏற்பட்டது என்று மணிமேகலை அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

இதை பார்த்த பொதுமக்கள் பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்து வந்தனர். இந்நிலையில் விஜய் டிவி நடுநிலையாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர்களும் பிரியங்காவின் சொம்பாகத்தான் இருப்பது உறுதியாக இருக்கிறது.

பிரியங்காவுக்கு சப்போர்ட் செய்யும் விஜய் டிவி

அதாவது இந்த வாரம் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வையல் கார்டு ரவுண்ட் வைக்கப்படுகிறது. இதில் ரக்சன் உடன் சேர்ந்து புகழ் சிறிது நேரம் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது புகழ் மணிமேகலை போல இமிடெட் செய்கிறார்.

மேலும் ராமர் பிரியங்கா போல தோரணையில் பேசினார். இருவருக்கும் வாக்குவாதம் நடத்துவது போல ஸ்கிரிப் தயார் செய்திருந்தார்கள். அதிலும் மணிமேகலை மேல் தான் தப்பு இருப்பது போல காட்டப்பட்டிருந்தது. சாதாரணமாக இந்த நிகழ்ச்சியை கொண்டு சென்றிருந்தால் மக்களுக்கு ஓரளவு விஜய் டிவியின் மீது மரியாதை இருந்திருக்கும்.

ஆனால் இப்போது பிரியங்காவின் சொம்பாக விஜய் டிவி இருக்கிறது என இந்த ப்ரோமோவை பார்த்தபின் ரசிகர்கள் கமெண்டில் கழுவி ஊற்றி வருகிறார்கள். அதோடு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பைனல் எபிசோடும் நடக்க இருக்கிறது.

பூதாகரமாக வெடிக்கும் பிரியங்கா, மணிமேகலை சண்டை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *