நடிகர் துருவா சர்ஜா நடிப்பில் உருவான மார்ட்டின் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
நடிகர் அர்ஜுன் கதை, திரைக்கதை எழுதியுள்ள ‘மார்ட்டின்’ படத்தில் துருவா சர்ஜா ஹீரோவாக நடித்துள்ளார். ஏபி.அர்ஜுன் இயக்கியுள்ளார். ரவி பஸ்ரூர் இசை அமைத்துள்ளார். இதில் வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சுக்ருதா வாக்லே, அச்யுத்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.
பிரம்மாண்ட ஆக்ஷன் படமான இது, அக்.11-ம் தேதி வெளியாகிறது. 5 இந்திய மொழிகள் உட்பட 13 மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் உதய் மேத்தா தெரித்துள்ளார்.
“கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் படத்தை வெளியிடுகிறோம். தவிர, பெங்காலி, அரபு, ஜப்பான், சீனா, ரஷ்யா, அரபு, ஸ்பானிஷ், கொரிய மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில், மார்ட்டின் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.