தனுஷை டார்கெட் செய்ய ராயன் தான் காரணம்.. உண்மையை உடைத்த வில்லன் நடிகர்

Dhanush: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் சமீபத்தில் வெளிவந்தது. பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற இப்படம் 120 கோடியை தாண்டி வசூலித்தது. இதற்கு ஏ ஆர் ரகுமானின் இசையும் ஒரு முக்கிய காரணம்.

அதனாலேயே அவருடன் இணைந்து தனுஷும் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக பாடலைப் பாடி வீடியோ வெளியிட்டு இருந்தார் அதே சமயம் இவர் மீது தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு கொடுத்த விவகாரமும் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது.

தனுஷ், சிம்பு, விஷால் மீது அவர்கள் நிறைவேற்றிய தீர்மானம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகர் சங்கத்தை கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு முடிவை அவர்கள் எடுத்ததற்கு அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

தனுஷ் பற்றி பேசிய ராதாரவி

இது பற்றி பேசி இருக்கும் ராதாரவி, தனுஷ் அப்படிப்பட்டவர் கிடையாது. அவர் பல பேருக்கு நல்லது செய்திருக்கிறார். அவருடைய படம் இப்போது ஓடிவிட்டதால் அவர் மீது அழுத்தம் கொடுப்பது சரியானது கிடையாது.

எல்லாரும் ஒரு குடும்பம் தான். இந்த மாதிரி பிரச்சினை வரும்போது உட்கார்ந்து பேசினால் சரியாகிவிடும். இது தொடராது என தெரிவித்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு விஷால் தன்னுடைய எதிர்ப்பைதொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

அது மட்டும் இன்றி தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்ததற்காக அவர்களுக்கு ஒரு கடிதத்தையும் அனுப்பி இருக்கிறார். 24 மணி நேரத்திற்குள் இதற்கு தகுந்த பதில் அளிக்கவில்லை என்றால் சட்ட ரீதியாக இந்த பிரச்சனை கொண்டு செல்லப்படும் எனவும் எச்சரித்துள்ளார். இதனால் தற்போது திரையுலகம் கடும் பரப்பரப்பில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *