ஒரு படத்தை ஓட வைக்க என்னல்லாம் பண்ண வேண்டி இருக்கு.. விஜய்க்காக வந்த திரிஷா, SK, லிஸ்ட் இன்னும் இருக்கு

Vijay-GOAT: இப்போது இருக்கும் காலகட்டத்தில் ஒரு படம் ஷூட்டிங் ஆரம்பித்து திரைக்கு வருவதற்குள் ஏகப்பட்ட சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அதிலும் சோசியல் மீடியா புழக்கம் சமீப காலங்களாக உச்சகட்டத்தில் இருக்கிறது.

எது நடந்தாலும் உடனுக்குடன் ஆடியன்ஸ்க்கு தெரிய வந்து விடுகிறது. இதனாலேயே படத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் படம் ரிலீசுக்கு முன்பே லீக் ஆகிவிடுகிறது. அப்படித்தான் கோட் வெளிவருவதற்கு முன்பே அனைத்து சர்ப்ரைஸ் விஷயங்களும் தெரியவந்தது.

இதை வெங்கட் பிரபு கூட ஆதங்கத்துடன் வெளிப்படுத்தி இருந்தார். அந்த வகையில் இன்று வெளியாகியிருக்கும் இப்படத்தில் நாம் எதிர்பார்த்தது போல் திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோரின் கேமியோ இருப்பது உறுதியாகியுள்ளது. அந்த போட்டோக்களும் வைரல் ஆகி வருகிறது.

trisha
trisha

கோட் படத்தில் திரிஷா, சிவகார்த்திகேயன்

அது மட்டுமல்லாமல் படையப்பா பட பிஜிஎம், அஜித் ரெஃபரன்ஸ், மங்காத்தா பிஜிஎம், பழைய விஜய் படங்களின் ரெஃபரன்ஸ் என ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது. இது அனைத்தும் ரசிக்கும் வகையில் தான் வெங்கட் பிரபு கொடுத்துள்ளார்.

sivakarthikeyan
sivakarthikeyan

ஆனால் ஒரு படத்தை ஓட வைக்க இந்த அளவுக்கு மெனக்கிட வேண்டுமா? விஜய் படத்தில் இத்தனை கதாபாத்திரங்கள் வந்து தான் படத்தை வெற்றியடைய செய்ய வேண்டுமா? ஏற்கனவே லியோ படத்திலும் இதுதான் நடந்தது.

மேலும் கோட் படத்தில் கூட 80 காலகட்டத்தில் இருந்து இப்போது வரை நாம் ரசித்த பல நட்சத்திரங்கள் இருக்கின்றனர். இப்படி பல பிரபலங்களை வைத்து ஹைப் ஏற்றி ஷீட் கொடுக்க முயன்றுள்ளார் வெங்கட் பிரபு.

இதற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு எழுந்தாலும் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். ஆனால் எது எப்படியோ கோட் முதல் காட்சியிலேயே பாசிட்டிவ் விமர்சனங்களை சந்திக்க தொடங்கிவிட்டது.

விஜய்க்காக முதல் ஆளாய் வந்த திரிஷா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *