வொர்க் அவுட் ஆனதா விஜய், வெங்கட் பிரபுவின் மேஜிக்.? GOAT அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

GOAT Twitter Review: விஜய் ரசிகர்கள் மாத கணக்கில் தவம் இருந்த கோட் இன்று திரைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் ஒன்பது மணி காட்சிகளுக்கு அனுமதி கொடுத்த நிலையில் பிற மாநிலங்களில் அதிகாலையிலேயே காட்சிகள் தொடங்கி விட்டது.

review-goat

தமிழ்நாட்டில் டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் பல கிலோ மீட்டர் பயணம் செய்து கோட் படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். தற்போது சோசியல் மீடியா முழுவதும் கோட் ஆதிக்கம் தான் நிறைந்துள்ளது.

review-goat

அடுத்தடுத்து வரும் விமர்சனங்களும் பாசிட்டிவாக இருக்கும் சூழலில் ரசிகர்களின் ட்விட்டர் கருத்துக்கள் பற்றி இங்க காண்போம். அதில் ஒட்டுமொத்த ரசிகர்களின் ஒரே கருத்து மங்காத்தா படத்தை விட கோட் ஆயிரம் மடங்கு சூப்பராக இருக்கிறது என்பதுதான்.

review-goat

ட்விட்டர் விமர்சனம்

அதேபோல் விஜய்யின் அறிமுகக் காட்சி, டைட்டில் கார்டு, இடைவேளை, கிளைமாக்ஸ் என ஒவ்வொன்றும் திரையில் மேஜிக் செய்திருக்கிறது. ஏகப்பட்ட சர்ப்ரைஸ் மற்றும் கேமியோ கதாபாத்திரங்கள் படத்தில் நிறைந்துள்ளது.

review-goat

அதிலும் விஜயகாந்த் வரும் காட்சிகள் புல்லரிக்க வைத்திருக்கிறது. உண்மையிலேயே இப்படம் அவருக்கான சிறந்த மரியாதை தான் என ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு கூறி வருகின்றனர்.

review-goat

மேலும் சண்டைக் காட்சிகள் டெக்னாலஜி என அனைத்துமே ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கிறது. ஆக மொத்தம் விஜய் வெங்கட் பிரபுவின் மேஜிக் கோட் படத்தில் பக்காவாக ஒர்க் அவுட் ஆகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

விஜய்யின் கோட் தரிசனம் வெற்றியா.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *