மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாழை’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘ஒத்த சட்டி சோறு’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாழை’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், ஜே.சதிஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ், ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது.
ரெட் ஜெயண்ட் மூவீஸ் இப்படத்தை விநியோகம் செய்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், மூன்றாவது பாடலான ‘ஒத்த சட்டி சோறு’ பாடல் இன்று (ஆக. 5) வெளியானது.