பாக்ஸ் ஆபிஸை கலக்கும் விக்ரம், பா.ரஞ்சித் கூட்டணி.. தங்கலான் 3 நாள் மொத்த வசூல் ரிப்போர்ட்

Thangalaan Collection: விக்ரம், பா ரஞ்சித் கூட்டணியில் உருவான தங்கலான் கடந்த 15ஆம் தேதி வெளியானது. ஜி.வி பிரகாஷ் இசையில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இதில் கடும் உழைப்பை கொடுத்துள்ளனர்.

மேலும் விக்ரம் இதுவரை இல்லாத அளவுக்கு இப்படத்திற்காக ரொம்பவே மெனக்கெட்டுள்ளார். அதை திரையில் பார்க்கும் போதே நம்மால் உணர முடிகிறது. அதுவே அவருக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக இருக்கிறது.

18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் வெள்ளைக்காரர் பேச்சை கேட்டு தங்கத்தை தேடி பயணிப்பது தான் படத்தின் கதை. அதை அப்படியே உள்வாங்கி உசுரை கொடுத்து நடித்திருக்கும் விக்ரமுக்கு இப்போது எல்லா பக்கமும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

வெற்றி பெற்ற விக்ரம் பா ரஞ்சித் கூட்டணி

அது மட்டும் இன்றி இப்படி ஒரு நடிப்பை யாராலும் கொடுத்து விட முடியாது எனவும் புகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் விக்ரம் தங்கலானாக ஜெயித்து காட்டியதோடு விருதுகளை வாங்கி குவிக்கவும் தயாராகிவிட்டார்.

இப்படி தடைகளைத் தாண்டி சாதித்துள்ள தங்கலான் முதல் நாளில் 26 கோடிகளை வசூலித்து இருந்தது. அதை அடுத்து இரண்டாவது நாளில் 20 கோடிகளையும் மூன்றாவது நாளில் 21 கோடிகளையும் வசூலித்திருக்கிறது.

ஆக மொத்தம் இந்த மூன்று நாட்களில் மட்டுமே இப்படம் 67 கோடிகளை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதனால் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தங்கலானோடு டிமான்டி காலனி 2, ரகு தாத்தா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் விக்ரம் கில்லி போல் சொல்லி அடித்திருக்கிறார். ஆக மொத்தம் அவருடைய இரண்டு வருட உழைப்புக்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைக்கும் தங்கலான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *