சென்னை: மத்திய அரசு துறைகளில் உயர் பதவிகளுக்கு, லேட்டரல் என்ட்ரி முறையில் பணி நியமனம் செய்வதற்கு, முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு உயர் பதவிகளில் நேரடி பணி நியமனம் சமூக நீதி மீதான தாக்குதல். நேரடி நியமனம் என்பது எஸ்.சி., மற்றும் எஸ்.டி., அலுவலர்களுக்கான வாய்ப்புகளை பறிக்கிறது. நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் கிரீமிலேயர் முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு
சமூக நீதியை நிலைநிறுத்த இட ஒதுக்கீட்டை பாதுகாத்து, அதை உறுதி செய்ய வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., காண காலியிடங்களை நிரப்பி, நியாயமான சமமான பதவி உயர்வுகளை உறுதி செய்ய வேண்டும். நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.