TVK மாநாட்டிற்கு வருகிறாரா ராகுல் காந்தி.? விஜய்யின் அரசியல் கூட்டணி ஃபார்முலா என்ன.?

Vijay: விஜய்யின் கோட் இன்னும் சில தினங்களில் தியேட்டருக்கு வருகிறது. இந்த பரபரப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில் அவருடைய அரசியல் கட்சி முதல் மாநாடு வரும் 23ஆம் தேதி விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது.

கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்திற்கும் மேல் மக்கள் வருகை தர இருக்கும் அந்த மாநாட்டிற்கான வேலைகள் அனைத்தும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அனுமதி வாங்குவது முதல் வரப்போகும் மக்களுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

அது மட்டும் இன்றி இந்த மாநாட்டில் விஜய் என்ன பேச போகிறார்? அவருடைய அரசியல் வியூகம் என்ன? கூட்டணி ஃபார்முலா என பல எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் இருக்கிறது. அரசியல் வட்டாரத்திலும் இதை எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி இந்த மாநாட்டிற்கு வருகை தர இருப்பதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. அப்படி என்றால் இவர்களின் கூட்டணி கிட்டத்தட்ட உறுதி என்றும் பேசப்பட்டு வருகிறது.

TVK மாநாட்டிற்கு வருகிறாரா ராகுல் காந்தி

ஆனால் விசாரித்து பார்த்ததில் அது உண்மை கிடையாது என்கிறது தமிழக வெற்றிக் கழகம். ஏற்கனவே சீமான் எப்படியாவது விஜய்யுடன் கூட்டணி அமைத்து விட வேண்டும் என முயற்சி செய்து வந்தார்.

ஆனால் தளபதியின் தற்போதைய மனநிலை தனித்து போட்டியிடுவது தான். இருப்பினும் கூட்டணி இல்லாமல் வெற்றி என்பது அவ்வளவு எளிது கிடையாது. அதிலும் முதல் முறை தேர்தலை சந்திக்க இருக்கும் இந்த கட்சி தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

மேலும் விஜய்யின் அரசியல் ஆலோசகரும் கூட்டணி பற்றி சில விஷயங்களை அவருக்கு ஆலோசத்துள்ளதாக கூறுகின்றனர். எனினும் அடுத்த வருட இறுதியில் தான் இக்கட்சியின் அரசியல் கூட்டணி பற்றி தெரியவரும்.

விஜய்யின் அரசியல் ஃபார்முலா என்ன.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *