அடையாளம் தெரியாத 400 உடல் பாகங்கள்… விடை தேடும் முயற்சியில் கேரள அரசு; கைகொடுக்குமா டி.என்.ஏ., பரிசோதனை?

வயநாடு: கேரள வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் டி.என்.ஏ., பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜன் தெரிவித்துள்ளார்
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சூரல்மலை, மண்டக்கை உள்ளிட்ட கிராமங்கள் நிலைகுலைந்து போகின. நிலச்சரிவால் வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டதில், ஏராளமான மக்கள் அதில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் மற்றும் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். பலி எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


டி.என்.ஏ., பரிசோதனை


ராணுவத்தின் சிறப்புக்குழுவினர் சாலியாறு ஆறு மற்றும் அதனையொட்டியுள்ள வனப்பகுதிகளில் தொடர்ந்து, காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுவரையில், 401 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், 349 உடல் உறுப்புகள் 121 ஆண்கள், 127 பெண்கள் என 248 பேருடையதாகும். அந்த உறுப்புகள் அனைத்தும் டி.என்.ஏ., பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனையின் மூலம், உடல் பாகங்கள் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

எண்ணிக்கை குறையும்


இது தொடர்பாக கேரள வருவாய்த்துறை அமைச்சர் கே ராஜன் கூறியதாவது:- டி.என்.ஏ., பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே, வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரிய வரும். இதுவரையில் மீட்கப்பட்ட உடல் பாகங்கள் என 405 உறுப்புகள் டி.என்.ஏ.,க்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 90 ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் வரும் போது, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

வீடுகள்

இந்த மாத இறுதிக்குள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள். வீடுகள் வழங்கப்படுவது தொடர்பான பட்டியலை கலெக்டர் தயார் செய்து வருகிறார், எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *