120 கோடிக்கு ஹாஸ்பிடல் கட்டியிருக்கலாமே.. பிரைவேட் ஜெட் வாங்கிய சூர்யா, கிளம்பிய எதிர்ப்பு

Suriya: சூர்யா இப்போது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் நடித்து முடித்துள்ள கங்குவா வரும் அக்டோபர் 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் நிச்சயம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என கூறுகின்றனர்.

இதையடுத்து கங்குவா 2, சூர்யா 44 என ஒவ்வொன்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இது ஒரு புறம் இருக்க சமீப காலமாக சூர்யா அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார். அதில் தற்போது அவர் சொந்த ஜெட் விமானம் வாங்கியதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.

நயன்தாரா உட்பட பலரும் தனி விமானம் வைத்திருக்கின்றனர். அதேபோல் சூர்யாவும் 120 கோடிக்கு ஜெட் விமானம் வாங்கிய தகவல் தான் சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால் கோவில் கட்டும் காசுக்கு மருத்துவமனை கட்டலாம் என ஒரு முறை ஜோதிகா கூறியிருந்தார்.

சூர்யாவை ரோஸ்ட் செய்த நெட்டிசன்கள்

இதனால் கடுப்பான மக்கள் அவரை இப்போது வரை ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் 120 கோடிக்கு சொந்த விமானம் வாங்குவதற்கு பதில் மருத்துவமனை கட்டி இருக்கலாமே என நெட்டிசன்கள் சூர்யாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதற்கு சூர்யா ரசிகர்கள் அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை வைத்து விமானம் வாங்குகிறார். உங்களுக்கு என்ன வந்துச்சு என பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் சோசியல் மீடியாவே அமளி துமளியாக இருக்கிறது.

அதைத்தொடர்ந்து இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என சூர்யா தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது முற்றிலும் வதந்தி தான் என ரசிகர்களின் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அதை அடுத்து இந்த பிரச்சனை தற்போது ஓய்ந்துள்ளது.

சூர்யா வாங்கிய 120 கோடி ஜெட் விமானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *