வார இறுதியை இந்த 9 படங்களோடு கொண்டாடுங்க.. ஓடிடியில் கெத்து காட்டும் ராயன்

This Week OTT Release Movies: இன்று தியேட்டரில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாழை, சூரி நடிப்பில் கொட்டுக்காளி ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு படங்களுக்குமே ஆடியன்ஸ் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

அதை நிறைவேற்றும் பொருட்டு இரு படங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் அடுத்தடுத்த காட்சிகளில் ரசிகர்களின் வரவும் அதிகரித்து வருகிறது. அதே போல் ஓடிடியை பொறுத்தவரையில் இந்த வாரம் 9 படங்கள் வெளியாகி உள்ளது.

அதில் பிரபாஸ் நடிப்பில் ஆயிரம் கோடியை தாண்டி வசூலித்த கல்கி அமேசான் பிரைம் தளத்தில் நேற்று வெளியானது. அதைத்தொடர்ந்து இன்று தனுஷின் ராயன் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

டிஜிட்டலுக்கு வந்த ராயன்

இதே தளத்தில் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை பற்றி வெளிவந்த ஜமா படமும் இன்று வெளியாகி இருக்கிறது. அதைத்தொடர்ந்து மலையாள படமான Grrr டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

மேலும் மலையாளத்தில் வெளிவந்த ஸ்வகரியம் சம்பவ பகுலம் சிம்ப்ளி சவுத் தளத்தில் வெளியாகியுள்ளது. அதேபோல் தெலுங்கு படமான விராஜி ஆஹா தமிழ் தளத்தில் வெளியாகி உள்ளது.

ஆங்கில படமான தி ஆக்சிடென்ட் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கிறது. நாளை ஹிந்தி படமான முஞ்சியா ஸ்டார் கோல்டு இந்தியா தளத்தில் வெளியாகிறது. அதேபோல் ஜியோ சினிமாவில் அபிகைல் திரில்லர் படமும் வெளியாகிறது.

இப்படியாக மேற்கண்ட படங்கள் இந்த வார இறுதியை மகிழ்விக்க வருகின்றன. இதில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் தியேட்டரைப் போல டிஜிட்டலிலும் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

வார இறுதியை மகிழ்விக்க வரும் படங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *