‘லப்பர் பந்து’ பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் மாதிரி ஜாதி ரீதியான படமா? ஒரே பதிலில் தெறிக்கவிட்ட இயக்குனர்

வாரந்தோறும் வதவதவென படங்கள் ரிலீசானாலும் அவற்றில் சின்ன பட்ஜெட்டோ பெரிய பட்ஜெட்டோ சில படங்கள் மட்டும் மக்களின் அடிமனசில் போய் உட்கார்ந்து கொண்டு எதோ பண்ணும். அந்த வரிசையில் சமீபத்தில் ரிலீசான படங்களில் ‘கொட்டுக்காளி’, ‘லப்பர் பந்து’ ஆகிய படங்களை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள நிலையில் இதில் லப்பர் பந்து படத்தை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழரசன் பச்சமுத்து தற்போது ஊடக வெளிச்சத்திற்கு வந்து எல்லோருடைய கவனத்தையும் பெற்றாலும், அவர் இதற்கு முன், கடந்த 2012 ஆம் ஆண்டு ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பின்னர், 2022 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற படத்தில் எழுத்தாரக பணியாற்றியுள்ளார். இவ்விரு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தினேஷ், ஹரீஸ் கல்யாண் காளி வெங்கட், பாலா சரவணன், தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிப்பில், ஷான் ரோல்டன் இசையில் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி ரிலீஸான படம் ‘லப்பர் பந்து’. இப்படத்தின் வெற்றி ரசிகர்கள் தியேட்டரில் மட்டுமல்ல சமூக வலைதளங்களிலும் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தில், கிராமம், விளையாட்டு, காதல் என்று இருந்தாலும் ஒடுக்கப்பட்ட இளைஞராக நடித்துள்ள ஹரீஸ் கல்யாண் தனக்கு வாய்ப்புகள் ஒதுக்கப்பட்டாலும் கிடைக்கும் சந்தர்பத்தில் தன் திறமையை எப்படி வெளிப்படுத்துகிறார் என்று காட்டப்பட்டிருந்தது.

இப்படத்தின் வெற்றி அதன் உருவாக்கம் பற்றி இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பிரபல ஊடகங்களுக்குப் பேட்டியளித்து வருகிறார். இந்த நிலையில், பிரபல சினிமா விமர்சகர் தமிழரசன் பச்சமுத்துவிடம், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் ரொம்ப சீரியஸா, அழுத்தமா ஜாதிய பற்றி படம் பண்ணுறாங்க. நீங்கள் பண்ணும் படங்களில் அதே ஜாதி விஷயங்கல கையாளுதல், அது நீரோடை மாதிரி கேஸுவலா போகுது. இங்கு ஜாதிச்சண்டை, ஈகோ என எல்லாமே இருக்குது. இது ரஞ்சித் பிலிம் மாதிரி எடுத்துக் கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு தமிழரசன் பச்சமுத்து, ”அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களின் ஸ்டேட்மெண்ட் அக்சரிவ்வாக இருக்கும்! அதன் டெப்ட் எனக்கு தெரியாது. ஆழமாக போகவில்லை. நான் வேடிக்கை பார்த்தவன். நான் சுயபரிசோதனை செய்து கொண்டிருக்கும்போது, என் மனநிலையில் இருந்ததை மாற்றிக் கொண்டேன். வாழை படத்தில் பாதிக்கப்பட்ட மாரி செல்வராஜின் ஸ்டேன்ட்மென்ட். ரஞ்சித் தன் கதைகளில் வழி சொல்லியிருக்கிறார். ஆனால், லப்பர் பந்தில் நான் அப்படி ஆழமாகப் போகவில்லை” என்று கூறியுள்ளார்.

தமிழரசன் பச்சமுத்து தனது முதல் படமான லப்பர் பந்துவில் இயக்குனராக வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவரது அடுத்த படமும் கிராமம் மற்றும் ஜாதியை உள்ளடக்கிய படமாக இருக்குமா? அல்லது கமர்ஷியல் ரீதியாக படமாக இருக்குமா என்பது பலரது எதிர்பார்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *