ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஜானி ஷேக் ஜானி பாஷா. அதாவது சினிமாவில் எல்லோருக்கும் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் என்பதால் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படுகிறார். இவர், தெலுங்கு, தமிழ், கன்னடம் என பல்வேறு மொழிகளில் விஜய், அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு தனித்துவமான டான்ஸ் அமைத்துக் கொடுத்து, இளம் ரசிகர்களின் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு, இளம் பெண் நடனக் கலைஞர் ஒருவர் தனக்கு பதினாறு வயதிருக்கும்போது, தன்னிடம் ஜானி தவறாக நடந்துகொண்டதாக அவர் மீது அந்தரங்கப் புகார் அளித்தார்.அதில், சென்னை, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் நடந்தபோது, ஜானி தன்னிடம் தவறாக நடந்ததாக பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.
இவ்விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், நரசிங்கி போலீஸார் விசாரணை மேற்கொண்டு, ஜானி மாஸ்டர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, ஜானி மாஸ்டர் தலைமறைவானார். பின்னர், கோவாவில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர்.இவ்விவகாரம் தொடர்பாக தெலுங்கு சினிமாத்துறை, ஜானி மாஸ்டர் அங்கு பணியாற்ற தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், அவரது மனைவி கூறியதாவது: ‘’’ஜானி தான் பணியாற்றும் படங்களுக்கு எல்லாம் அப்பெண்ணுக்கு சான்ஸ் கொடுத்தார். அப்பெண் சினிமா அசோசியேசனில் சேரப் பணம் கட்டமுடியாமல் இருந்தபோது, அதை ஜானி தான் கொடுத்தார்.அப்பெண் மைனராக இருந்த போது, அவருடன் ஜானி தவறாக நடந்துகொண்டதற்கு ஆதாரமிருக்கிறதா? அவர் மீதான குற்றம் நிரூபனமானால், அவரைவிட்டு விலகவும் தான் ரெடி என்று கேள்வி கூறியிருந்தார்.
இவ்விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில், ஜானி மாஸ்டர், அப்பெண்ணிடம் தவறாக நடந்துஜொண்டதை போலீஸாரிடம் ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.இது சினிமா வட்டாரத்தில் அவரது ரசிகர்கள் தரப்பிலும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் விரைவில் அவருக்குத் தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.