ஒரே நாளில் மோதிய சிவகார்த்திகேயன், மாரி செல்வராஜ்.. ஜெயித்தது யாரு.? வாழை, கொட்டுக்காளி முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

Kottukkaali-Vaazhai Collection: மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவருடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான வாழை நேற்று வெளியானது. அதேபோல் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடித்திருந்த கொட்டுக்காளி படமும் நேற்று வெளியானது.

இரு படங்களுமே ஆடியன்ஸ் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதில் வாழை படத்தை பார்த்த இயக்குனர் பாலா உட்பட பலரும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியதோடு இயக்குனரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

அப்படி என்னதான் இந்த படத்துல இருக்கு என படத்தை பார்த்த ஆடியன்ஸும் தியேட்டரை விட்டு வெளிவரும் போது கனத்த மனதுடன் தான் வருகின்றனர். அந்த அளவுக்கு கிளைமாக்ஸ் அனைவரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

கொட்டுக்காளி, வாழை முதல் நாள் வசூல்

அதேபோல் கொட்டுக்காளி படமும் சர்வதேச அளவில் திரையிடப்பட்டு விருதுகளை வாங்கியது. மேலும் படமும் ஆணாதிக்கம், அதை எதிர்த்து அமைதிப் போராட்டம் நடத்தும் பெண்ணின் பிடிவாதம் என யதார்த்தத்தின் படைப்பாக இருக்கிறது.

இப்படி இரண்டு படங்களும் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் வாழை முதல் நாளிலேயே 1.3 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே இதன் ஓடிடி பிசினஸ் கை மேல் பலனை கொடுத்துள்ளது.

அதைத்தொடர்ந்து படத்தின் வசூலும் லாபம்தான். அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வருவதால் இது நிச்சயம் ஏறுமுகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல் கொட்டுக்காளி படத்தின் முதல் நாள் வசூல் என்று பார்க்கையில் 50 லட்சம் ஆக இருக்கிறது.

தற்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் பரவி வரும் நிலையில் இப்படத்திற்கும் ரசிகர்களின் வரவு அதிகரித்து வருகிறது. அதனால் அடுத்தடுத்த நாட்களில் இந்த இரண்டு படங்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு வசூலை வாரி குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர் மோதிய கொட்டுக்காளி, வாழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *