யு.எஸ்., ஓபன்: கசட்கினா வெற்றி

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ரஷ்யாவின் கசட்கினா வெற்றி பெற்றார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்யாவின் டாரியா கசட்கினா, ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன் மோதினர். முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய கசட்கினா, இரண்டாவது செட்டை 6-4 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 15 நிமிடம் நீடித்த போட்டியில் கசட்கினா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு முதல் சுற்றில் கிரீசின் மரியா சக்காரி, சீனாவின் யாபான் வாங் மோதினர். முதல் செட்டை 2-6 என இழந்த மரியா சக்காரி, காயத்தால் பாதியில் விலகினார். இதனையடுத்து சீன வீராங்கனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *