கோவை: புச்சி பாபு கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக சூர்யகுமார், ஸ்ரேயாஸ், சர்பராஸ் கான் பங்கேற்கின்றனர்.
தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று கோவையில் துவங்கும் லீக் போட்டியில் மும்பை, டி.என்.சி.ஏ., லெவன் அணிகள் விளையாடுகின்றன. இதில் மும்பை அணி சார்பில் சூர்யகுமார் யாதவ் களமிறங்குகிறார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூர் டெஸ்டில் சூர்யகுமார் அறிமுகமானார். அதன்பின் இவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. புச்சி பாபு கிரிக்கெட்டில் திறமையை நிரூபிக்கும் பட்சத்தில், வங்கதேசம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வாகலாம்.
சூர்யகுமாரை தவிர ஸ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கானும் மும்பை அணிக்காக விளையாட உள்ளனர். டெஸ்ட் அணியில் இடம் பெற புச்சி பாபு கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மும்பை அணியை வழிநடத்தவுள்ள சர்பராஸ் கான், மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்ப இப்போட்டி உதவலாம்.