மோடி திறந்து வைத்த 35 அடி உயர சிவாஜி சிலை விழுந்து நொறுங்கியது; தரமற்ற கட்டுமானம் – எதிர்க்கட்சிகள் விமர்சனம்

சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்ததற்கான சரியான காரணத்தை நிபுணர்கள் கண்டுபிடிப்பார்கள். ஆனால், மாவட்டத்தில் கடந்த 2-3 நாட்களாக கனமழை மற்றும் பலத்த காற்று வீசுகிறது அதிகாரி ஒருவர் கூறினார்.

 

சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்ததற்கான சரியான காரணத்தை நிபுணர்கள் கண்டுபிடிப்பார்கள். ஆனால், மாவட்டத்தில் கடந்த 2-3 நாட்களாக கனமழை மற்றும் பலத்த காற்று வீசுகிறது.

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை திங்கள்கிழமை இடிந்து விழுந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாநில அரசு பணியின் தரத்தில் கவனம் செலுத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மதியம் 1 மணியளவில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் 35 அடி உயர சிலை இடிந்து விழுந்தது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்ததற்கு சரியான காரணத்தை வல்லுநர்கள் கண்டுபிடிப்பார்கள், ஆனால் மாவட்டத்தில் கடந்த 2 அல்லது 3 நாட்களாக கனமழை மற்றும் பலத்த காற்று வீசுகிறது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி கடற்படை தினத்தையொட்டி பிரதமர் மோடி இந்த சிலையை திறந்து வைத்தார். கோட்டையில் நடந்த கொண்டாட்டங்களிலும் பங்கேற்றார்.

என்.சி.பி (சரத் பவார் அணி) மாநிலத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயந்த் பாட்டீல், “சரியான கவனிப்பு எடுக்காததால், சரிவுக்கு மாநில அரசுதான் காரணம். பணியின் தரத்தில் அரசு கவனம் செலுத்தவில்லை. சிலையை திறப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்ட நிகழ்வை நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தியது. இந்த மகாராஷ்டிரா அரசு புதிய டெண்டர்களை மட்டுமே வழங்கி, கமிஷன்களை ஏற்றுக்கொண்டு, அதன்படி ஒப்பந்தங்களை வழங்குகிறது.” என்று குற்றம் சாட்டினார்.

சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே – யு.பி.டி) எம்.எல்.ஏ வைபவ் நாயக், கட்டுமானப் பணியின் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி மாநில அரசை விமர்சித்தார். “மாநில அரசு பொறுப்பை தட்டிக்கழிக்க முயற்சி செய்யலாம். சிலை கட்டுவதற்கும், அமைப்பதற்கும் காரணமானவர்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.

மகாராஷ்டிர அமைச்சர் தீபக் கேசர்க்கார் கூறுகையில், “இந்த சம்பவம் குறித்த அனைத்து விவரங்களும் என்னிடம் இல்லை. இருப்பினும், இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று சிந்துதுர்க் மாவட்டத்தின் பாதுகாப்பு அமைச்சரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான ரவீந்திர சவான் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே இடத்தில் புதிய சிலையை அமைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலை, கடல் கோட்டையை கட்டுவதில் சிவாஜி மகாராஜின் தொலைநோக்கு முயற்சிகளுக்கு மரியாதை செலுத்துகிறது. இந்த பிரச்னையை விரைவாகவும் திறமையாகவும் தீர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்” என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *